தலைகீழாக மாறிய இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. இந்தியாவில் இதை எதிர்பார்க்கவில்லை..!!

தலைகீழாக மாறிய இந்திய மிடில் கிளாஸ் மக்கள்.. இந்தியாவில் இதை எதிர்பார்க்கவில்லை..!!
இந்திய மிடில் கிளாஸ் மக்கள் என்றாலே பொதுவான பிம்பம், இப்பிரிவினர் அதிகம் செலவு செய்யமாட்டார்கள், சேமிப்பு மற்றும் முதலீட்டில் ....

இந்திய மிடில் கிளாஸ் மக்கள் என்றாலே பொதுவான பிம்பம், இப்பிரிவினர் அதிகம் செலவு செய்யமாட்டார்கள், சேமிப்பு மற்றும் முதலீட்டில் அதிகம் கவனம் செலுத்தும் பிரிவினர், வருமானத்தில் ஒவ்வொரு ரூபாயும் பார்த்து பார்த்து செலவு செய்யும் மக்கள் கூட்டம் என்ற கருதப்பட்டது. ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது.

இந்திய பொருளாதாரத்திலும், நிதி வலிமையிலும் மிடில் கிளாஸ் மக்களின் பங்கு அதிகமாக இருக்கும் வேளையில் தற்போது அதிகப்படியான மக்கள் சேமிப்பதை மறந்து அதிகளவில் செலவு செய்து வருகின்றனர், அதுவும் கடன் வாங்கி செலவு செய்வது அதிகரித்துள்ளது. இது சேமிப்பை முக்கியமான கருதும் மக்களின் மனநிலையை தெளிவாக பார்க்க முடிகிறது.

இதேவேளையில் நாட்டு மக்களின் சேமிப்பு குறைந்து கடன் அளவு அதிகரித்துள்ளது, குறிப்பாக கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்கி செலவு செய்வது அதிகரித்துள்ளது. இந்த நிலையில்நாட்டின் மக்கள் ஈஎம்ஐ (Equated Monthly Installment) மூலம் அதிகமாக எந்த பொருட்களை வாங்குகிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

கிரெடிட் கார்டு மற்றும் கடன் மூலம் நாட்டு மக்கள் அதிகமாக ஐபோன், கார், பிரீமியம் மேக்அப் பொருட்கள், திருமண செலவுகள் மற்றும் பயண செலவுகள் போன்றவற்றை அதிகம் வாங்கி வருகின்றனர். இந்த மாற்றம், நமது பெற்றோர் மற்றும் பாட்டி-தாத்தாக்களின் சேமிப்பு பழக்கத்திற்கு முற்றிலும் மாறுப்பட்டவையாக உள்ளது. இந்தியாவில் ஐபோன் வாங்குவோர் மத்தியில் 70% பேர் ஈஎம்ஐ மூலம் வாங்குகின்றனர். அதேபோல், கார் விற்பனையில் 75% பேர் தவணை நிதி உதவியுடன் வாங்குகின்றனர். பிரீமியம் மேக்அப் பொருட்களை வாங்குவதில், நைகா போன்ற தளங்களில் 60%க்கும் மேற்பட்ட ஆர்டர்கள் "பை நவ் பே லேட்டர்" (BNPL) அல்லது ஈஎம்ஐ வசதியை பயன்படுத்துகின்றன.

இதை தொடர்நது திருமண செலவுகளுக்கு 40-50% பேர் கடன் வாங்கி அதை ஈஎம்ஐ ஆக செலுத்தும் முறை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சர்வதேச பயணங்கள் மற்றும் ஹோட்டல் செலவுகளுக்கு 35-40% BNPL சேவையை பயன்படுத்திகின்றனர்.

இந்திய மிடில் கிளாஸ் மக்களின் இந்த புதிய போக்கு, மிகவும் ஆச்சரியமளிப்பதாக உள்ளது. முன்பு, இந்திய குடும்பங்கள் சேமித்து பிறகு பொருட்களை வாங்குவதையே அதிகம் விரும்பினர். ஆனால் இப்போது, மதிப்பு குறையும் (depreciating) சொத்துக்களை கூட ஈஎம்ஐ மூலம் வாங்குவதை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தற்போதைய மிடில் கிளாஸ் மக்கள் தங்களை மிடில் கிளாஸ் மக்களாக காட்டிக்கொள்ள கூடாது என்பதற்காகவே கடன் வாங்கி பொருட்களை பெற்று செல்வந்தர்களைப் போலவே உணர வேண்டும் என்ற ஆசையில் தங்கள் சேமிப்புகளை கரைத்து வருகின்றனர். இது தனிநபரின் விருப்பம் என்றாலும் பெரும் சமுகம் இதை பின்பற்றி வரும் காரணத்தால் இந்திய குடும்பங்களின் நிதி வலிமையை இழக்கும் அபாயம்.

கொரோனா தொற்று காலத்தில் எத்தனை குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியது என்பது நம் கண்முன்னே பார்த்தோம், தற்போது பணிநீக்கம், ரெசிஷன், ஏஐ, ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ் என டெக் சேவை முதல் உற்பத்தி துறை வரையில் அனைத்திலும் மிகப்பெரிய மாற்றம் நடந்து வருகிறது. இது வேலைவாய்ப்பு இழப்பை அதிகரிக்கும் சீசனாக பார்க்கப்படும் வேளையில் உங்களுடைய அதீத கடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய இளம் தலைமுறையினர் ஸ்டேட்ஸ் சிம்பிள் என நிம்பி ஆடம்பர பொருட்களை வாங்கி வருகிறார்கள். இதில் முக்கியமாக ஐபோன், சர்வதேச சுற்றுலா, காஸ்ட்லியான ஷூ (நைக்கி ஜோர்டன்ஸ், ஈசி, ஸ்னீக்கர்ஸ் போன்றவற்றை ரூ.10000 - ரூ.12,000 மேல்), ஆடம்பர திருமணங்கள், உயர்தர மேக்புக் பொருட்கள், பிரீமியம் ஜிம் மெம்பர்ஷிப், மற்றும் உயர்தர SUVகள் போன்றவை இப்போது முக்கியமான அந்தஸ்து குறியீடுகளாக மாறியுள்ளன.

இத்தகைய போக்கு இந்திய மிடில் கிளாஸ் மக்களுக்கு சரியானதா..? முன்பெல்லாம் வீடு, தங்க நகை போன்றவற்றை தான் கடன் பெற்று வாங்கி வந்தனர். தற்போது விலை மதிப்பு குறையும் பொருட்களை தான் அதிகம் கடனில் வாங்கி வருகின்றனர். வாங்கிய பின்பு விலை மதிப்பு குறையும் ஐபோன், கார், பைக், ஷூ, மேக்அப், ஆடம்பர லைப்ஸ்டைல் பொருட்களை வாங்குவது, கடன் வாங்கி வெளிநாட்டு சுற்றுலா-வுக்கு செல்வது தவறு கிடையாது, ஆனால் அதை கடனில் வாங்குவதை குறைத்துக்கொண்டால் குடும்ப நிதி நிலைக்கு உகந்தது.