இன்றைய திருக்குறள்

இன்றைய திருக்குறள்
திருவள்ளுவர்

 திருக்குறள் -இல்வாழ்க்கை அதிகாரம் 

 குறள் எண் :  49

"அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று."

                                                - திருவள்ளுவர்

குறள் விளக்கம் :

அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.