டோக்கன் தங்கம்: உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் முதலீடு இதுதான்! இதைப் பற்றித் தெரியுமா

டோக்கன் தங்கம்: உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் முதலீடு இதுதான்! இதைப் பற்றித் தெரியுமா
உலகம் முழுவதும் பிரபலமாகி வரும் டோக்கன் தங்கம். இதில் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா

இந்தியர்களுக்கும், தங்கத்துக்கும் இடையேயான உறவு உலகம் அறிந்த விஷயம். பல நூற்றாண்டுகளாக இந்தியர்கள் தங்கத்தைச் சேமித்து வருகின்றனர். உலகளவில் மிகப்பெரிய தங்கம் கையிருப்பு இந்தியக் குடும்பங்களிடம் உள்ளது. பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும் அரணாகத் தங்கம் இருக்கிறது. இதுதவிர, அந்தஸ்துக்கான பொருளாகவும் தங்கம் பார்க்கப்படுகிறது. திருமணங்கள் போன்ற குடும்ப விசேஷங்களுக்கும், தீபாவளி, அட்சய திருதியை போன்ற பண்டிகைகளுக்கும் இந்தியர்கள் தங்கம் வாங்குவது வழக்கம். இப்படிச் சேமிக்கப்படும் தங்கம் அடுத்த தலைமுறையினரிடம் வழங்கப்பட்டுவிடும்.

உலகளவில் பார்க்கும்போது போர்க்காலங்கள், பொருளாதார நெருக்கடி போன்ற காலகட்டங்களில் தங்கம் விலை உயரும். ஏனெனில், தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுகிறது. சமீப காலமாக உலகம் முழுவதும் நிச்சயமற்ற நிலை வளர்ந்து வருகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படுகிறது. வர்த்தகப் போர், வரிப் போர் போன்ற பொருளாதார மோதல்கள் மறுபக்கம். இதுதவிர, நாணயங்களின் மதிப்பும் இறங்கி வருகிறது. எனவே, முன்னெப்போதையும் விடத் தங்கம் இப்போது பிரகாசமாக மின்னுகிறது.