புதிய பாட திட்டத்தில் காலணி உற்பத்தி தொடர்பான பயிற்சி: மத்திய பயிற்சி நிறுவன இயக்குநர் முரளி தகவல்

புதிய பாட திட்டத்தில் காலணி உற்பத்தி தொடர்பான பயிற்சி: மத்திய பயிற்சி நிறுவன இயக்குநர் முரளி தகவல்
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.முரளி. உடன், இயக்குநரின் தனிச் செயலாளர் ஆஃபியா, சேர்க்கை பொறுப்பாளர் காஞ்சனா மாலா, மத்திய செய்தி மற்றும் தகவல் துறை சென்னை பிரிவின் உதவி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர்

சென்னை: மத்​திய காலணி பயிற்சி நிறு​வனத்​தில், புதிய பாடத் திட்​ட​த்தில் காலணி உற்​பத்தி தொடர்​பான பயிற்சி வகுப்​பு​கள் தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக, பயிற்சி நிறு​வனத்​தின் இயக்​குநர் கே.​முரளி தெரி​வித்​தார்.

இதுகுறித்​து அவர் சென்​னை​யில் நேற்று நிருபர்​களிடம் கூறிய​தாவது: இந்த நிறு​வனம் 67 ஆண்​டு​களாக செயல்​பட்டு வரு​கிறது. தற்​போது காலணி தொடர்​பான பயிற்சி வகுப்​பு​கள் புதிய பாடத்​திட்​ட​த்தில் தொடங்கப்​பட்​டுள்ளது. தமிழகம் காலணி ஏற்​றும​தி​யில் முதன்​மையாய் இருப்​ப​தற்​கு, மத்​திய காலணி பயிற்சி மையமும் ஒரு காரணம். தமிழகத்தின்தோல் மற்​றும்தோல் அல்​லாத காலணி துறை​யில் கிட்​டதட்ட ரூ.12,100 கோடி முதலீடு​கள் கிடைத்​துள்​ளது.

திண்​டிவனம், உளுந்​தூர்​பேட்​டை, ஜெயங்​கொண்​டம், புதுக்​கோட்​டை, கரூர், ராணிப்​பேட்டை உள்​ளிட்ட இடங்​களில் தோல் அல்​லாத காலணி​கள் தொழிற்​சாலைகள் வரவுள்​ளது. ஒவ்​வொரு ஆண்​டும் 250 முதல் 300 பேர் மத்​திய காலணி பயிற்சி நிறு​வனத்​தில் இருந்து பயிற்சி பெற்று வெளி​யேறுகின்​றனர். ஆனால், தற்​போதைய தேவை 10 மடங்கு அதி​க​மாக உள்​ள​தால், இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை அதி​கரிக்​கப்​படும்.

நைக், பூமா, அடி​டாஸ், மற்​றும் ஸ்கெச்​சர்ஸ் போன்ற உலகளா​விய பிராண்​டு​கள் தென்​னிந்​தி​யா​வில் உற்​பத்தி அலகு​களை அமைப்ப​தால், தமிழ்​நாட்​டிற்கு மட்​டும் 2025-26 மற்​றும் 2026-27 நிதி​யாண்​டில் காலணி துறை​யில் சுமார் 1.35 லட்​சம் திறமை​யான தொழிலா​ளர்​கள் தேவைப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதில், 10 சதவீத தேவை தொழில்​நுட்ப மேலாண்​மைப் பணிகளுக்கானது. இதனால், நமது நிறு​வனத்​தில் பயிற்சி பெறு​பவர்​கள் பயனடை​வார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.