பொழுதுபோக்காகத் தொடங்கிய தொழில், இன்று வீட்டிலிருந்தே மாதம் ரூ.1 லட்சம்...’’ அசத்தும் கிருஷ்ணவேணி!

பொழுதுபோக்காகத் தொடங்கிய தொழில், இன்று வீட்டிலிருந்தே மாதம் ரூ.1 லட்சம்...’’ அசத்தும் கிருஷ்ணவேணி!
பொழுதுபோக்காகத் தொடங்கிய தொழில், இன்று வீட்டிலிருந்தே மாதம் ரூ.1 லட்சம்...’’ அசத்தும் கிருஷ்ணவேணி!

****AGNISIRAGU****

மனித வாழ்க்கை நிலையற்றது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான். அதிலும் பெண்களின் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்றே சொல்ல முடியாது. பெற்றோர், உடன் பிறந்தோர், கணவர், குழந்தைகள் எனப் பல காரணங்களால் பெண்களின் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத திருப்பங்களும், எதிர்பாராத அசம்பாவிதங்களும்கூட நடந்துவிடும். ஆனால், எல்லா சவால்களையும், நெருக்கடிகளையும் கடந்து சில பெண்கள் வெற்றியை நோக்கி விடாமுயற்சியுடன் பயணிக்கிறார்கள். அந்தச் சிலரில் ஒருவர்தான் கிருஷ்ணவேணி

மதுரை மாவட்டம், TNHB காலனி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, கும்பகோணத்தில் பிறந்தவர். ஆனால், திருமணமாகி மதுரையில் செட்டில் ஆகியவர். சில எதிர்பாராத நிகழ்வுகளால் இவருடைய வாழ்க்கையே கேள்விக்குறியான நிலையிலும், தன்னைத் தானே மீண்டும் புதுப்பித்துக் கொண்டு, இன்று ஒரு பிசினஸ் வுமனாக மாறியிருக்கிறார். ஆர்.கே ஜூட் பேக்ஸ் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வரும் இவருக்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கிருஷ்ணவேணியின் வெற்றிப் பயணத்தைப் பற்றி அவரிடம் பேசினோம்.

நான் கும்பகோணத்தில், பெரிய குடும்பத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். பள்ளிப் படிப்பு முடித்துவிட்டு கல்லூரியில் பி.எஸ்ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். அதைத் தொடர்ந்து எம்.எஸ்ஸி படிக்க வேண்டும் என்று மிகுந்த ஆசையுடன் இருந்தேன். ஆனால், அப்போது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், தொடர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது

****AGNISIRAGU****