படிக்குற காலத்துல என்னை ‘மக்கு’ன்னாங்க... இப்போ தமிழ் ஆய்வாளர்னு கொண்டாடறாங்க!” ஆசிரியர் கனகலட்சுமி

படிக்குற காலத்துல எழுத்துகளை வாசிக்கத் தெரியலைங்கிறதால ‘மக்கு’னு திட்டி என்னை ஓரமா உட்கார வெச்சாங்க. எப்படியோ தட்டுத் தடுமாறி ஆறாவது பாஸ் பண்ணிட்டேன். ஏழாவது படிக்கும் போது, விஜயலட்சுமினு ஒரு டீச்சர் வந்தாங்க. அவங்கதான் எனக்கு தமிழ் கத்துக் கொடுத்தாங்க. அவங்க விதைச்ச விதைதான் இந்தப் பயணம்” - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் கனகலட்சுமி.
சென்னை, செனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுகிறார் கனகலட்சுமி. கடந்த 23 ஆண்டுகளாக தமிழ்மொழி குறித்தும், அதை எளிமையாகக் கற்பிக்கும் விதம் குறித்தும் பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். உலகிலேயே முதல்முறையாக, ‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ என்ற தலைப்பில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன் மூலம் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி, 10,000-க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை வழங்கியுள்ளார்
.இங்கிலாந்து க்ராய்டன் தமிழ்ச் சங்கம் சார்பா, உலக அளவுல 100 செந்தமிழ் சான்றோர் களைச் சிறப்பிக்கிற திருவிழா நடத்த திட்டமிட் டாங்க. தமிழ்நாட்டுல இருந்து நான் தேர்வு செய்யப்பட்டேன்