இலவச வீட்டு மனை பட்டா இனி யாருக்கு கிடைக்கும்.. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன??

மதுரை: இலவச வீட்டுமனை பட்டாவை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இது ஒரு நலத்திட்டத்தின்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். தகுதியின் அடிப்படையில் வீடு இல்லாத ஏழைகளுக்கு மட்டுமே இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் வருமான அளவுகோல்கள் மிக முக்கியமானவை என்றும் நீதிபதிகள் தீர்ப்பமதுரையை சேர்ந்த பலர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், " மதுரை திருப்பரங்குன்றம் நிலையூர் பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும்படி மதுரை மாவட்ட கலெக்டருக்கு மனு அளித்தோம். அவர் 2022-ம் ஆண்டில் நிராகரித்துவிட்டார். எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் ஆகியோர் பிறப்பித்த தீர்ப்பில் கூறுகையில், "தகுதியற்ற நபர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடியாது. மேலும் இலவச வீட்டு மனை பட்டாவை ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. இது ஒரு நலத்திட்டத்தின்பேரில் எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும். தகுதியின் அடிப்படையில் வீடு இல்லாத ஏழைகளுக்கு மட்டுமே இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. இதில் வருமான அளவுகோல்கள் மிக முக்கியமானவை" இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்..
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம் இலவச வீட்டு மனை பட்டா என்பது ஆக்கிரமித்தவர்களுக்கு தரப்படுவது கிடையாது. அது நிலம் இல்லாத வீடு இல்லாத ஏழைஎளிய மக்களுக்கே தரப்படும் ஒன்று என்று திட்டவட்டமாக நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழக அரசின் திட்டப்படி புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிக்கும் ஏழைகள் இலவச மனைப்பட்டா பெற முடியும் . அதேநேரம் டி அரசு துறைகளுக்கு ஆட்சேபனை இல்லாத, நீர் நிலைகள் அல்லாத நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, 3 சென்ட் வரை இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. அவ்வப்போது இலவச வீட்டு மனை பட்டாவைஅரசு வழங்கி வருகிறது..
இலவச வீட்டு மனை பட்டா பெற வழிமுறைகள்
ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருப்போருக்கு மட்டும் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படுகிறது. அதேநேரம் நீர்நிலைகள், கால்வாய்கள், சாலைகள், கோயில் நிலங்கள் போன்ற ஆட்சேபகரமான ஆக்கிரமிப்பு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்போருக்கு எந்த காலத்திலும் பட்டா வழங்கப்படுவது இல்லை. எனவே பத்திரம் இருக்கிறது என்று யாராவது சொன்னால் வாங்கவே வேண்டாம்...
இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதிகள் என்ன
ஆட்சேபனை அற்ற நத்தம் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசிப்பவர்கள் வீட்டு மனை பட்டா பெற விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் நபர் பெயரில் எந்த வீட்டு மனையும் இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் மிக குறைவாகவே இருக்க வேண்டும். வறுமை கோட்டிற்கு கீழ்உள்ளவர்களே இலவச வீட்டு மனை பட்டா பெற முடியும். பட்டாவிற்கு விண்ணப்பிக்கும் நபர் பெயரில் எந்த சொத்தும் இருக்கக்கூடாது. அத்துடன் ஆக்கிரமித்து குடியிருக்கும் இடத்திற்கான எல்லா ஆவணங்களும் கண்டிப்பாக இருக்க வேண்டும்...
இலவச வீட்டு மனை பட்டா பெற தேவையான ஆவணங்கள் :
விண்ணப்பிக்கும் நபருக்கு வேறு நிலபுலன் மனை வீடுகள் உள்ளிட்ட அசையா சொத்துக்கள் ஏதும் இல்லாமல் இருப்பதே முதல் ஆவணமாகும். அத்துடன் அந்த இடத்தில் வசிக்கும் நபர், குடும்ப அட்டை ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு.. வருமானச்சான்று.. கோட்டா முறையில் பெற சாதி சான்று உள்பட விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். எந்த பகுதியில் குடியிருப்புக்கு ஏற்ற அரசு நத்தம் புறம்போக்கு உள்ளது என்பதை அறிந்து அந்த பகுதியை குறிப்பிட்டு மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம்...
இலவச வீட்டு மனை பட்டா மூலம் எத்தனை சென்ட் நிலம் உங்களுக்கு கிடைக்கும்
சென்றை போன்ற மாநகர பகுதியில் 1 1/4 அல்லது 1 .1/2 செண்ட் இடம் கிடைக்கும். கிராம புறப்பகுதி எனில் 2 அல்லது 2 1/2 செண்ட் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதேநேரம் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள குடியிருப்புதான என்பதை முதலில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வட்டாட்சியர் மற்றும் வட்ட தலைமை நில அளவர் ஆகியோரைக் கொண்ட குழுவினர் பார்ப்பார்கள். அதன்பிறகே வரன்முறைப்படுத்தப்பட்ட பட்டா தருவார்கள்.