இந்தியா- சீனா இடையே 3-வது நாடு தலையிடக்கூடாது - ஜெய்சங்கர் வலியுறுத்தல்...

இந்தியா- சீனா இடையே 3-வது நாடு தலையிடக்கூடாது - ஜெய்சங்கர் வலியுறுத்தல்...
இந்தியாவுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் சீனா எதிர் பார்க்ககூடிய வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் கூறினார்.;

பீஜிங்,

மத்திய வெளியுறவு துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் சீனாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டர். அப்போது அவர் சீன அதிபர் ஜின் பிங்கை சந்தித்தார். அதனை தொடர்ந்து ஜெய்சங்கர் சீன வெளியுறவு துறை மந்திரி வாங்கியை சந்தித்து இரு தரப்பு உறவு கள் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசினார்.

அப்போது அவர் கடந்த 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவுக்கும். சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின் படி டெப்சாஸ் சமவெளி மற்றும் டெம்சோ பகுதியில் இந்திய ராணுவம் மீண்டும் ரோந்து பணிகளை தொடங்குவது திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.கிழக்கு லடாக்கில் கர்வான் மோதல் முடிந்து 5 ஆண்டுகள் முடிந்து விட்டதால் இரு படைகளும் பதற்றத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என சீன மந்திரியிடம் ஜெய்சங்கர் எடுத்து கூறினார்.

இந்தியாவுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்காமல் சீனா எதிர் பார்க்ககூடிய வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். மேலும் இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளுக்கு நிலையான எல்லை ஒரு முக்கிய காரணியாகும் இந்தியா-சீனா இருதரப்பு உறவுகளை வரையறுக்க 3-ம் நாடுகளை அனுமதிக்ககூடாது என்றும் ஜெய்சங்கர் வலியுறுத்தியதாக தகவலல்கள் வெளியாகி இருக்கிறது. இரு தரப்பிற்கும் இடையே சுமூகமான பேச்சு வார்த்தை நடந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.