தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா பெரிய ஸ்டார்... ரூ.2500 கோடி....

பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அக்சய் குமார். இவரின் குடும்பமே சினிமா குடும்பம். இவரின் மனைவி டிவிங்கிள் கண்ணா நடிகைதான். டிவிங்கிள், பாலிவுட்டின் முதல் சூப்பர் ஸ்டார்களின் ஒருவரான ராஜேஷ் கண்ணா மற்றும் நடிகை டிம்பிள் கபாடியாவின் வாரிசு ஆவார். அந்த வகையில் பரம்பரையாக இந்தி சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்தக் குடும்பம். தற்போதைய நிலையில் சுமார் ரூ.2700 கோடி சொத்துக்கள் கொண்ட குடும்பமாகவும் இருக்கிறது...
இந்நிலையில், அக்சய் மற்றும் டிவிங்கிள் கண்ணா தம்பதியின் ஒரே மகனான ஆரவ் குமார் பாடியா பாலிவுட் சினிமா உலகில் இருந்து விலகியே நிற்கிறார். 22 வயதாகும் ஆரவ் பாடியா சினிமா துறை மீது ஆர்வம் இல்லையாம். வாரிசுகள் நிறைந்த பாலிவுட் திரையுலகில் அடுத்த தலைமுறை வாரிசுகள் அறிமுகமாகி வருகின்றனர். ஏற்கனவே, ஷாருக்கானின் இரண்டு குழந்தைகளும் சினிமாவில் நுழைந்துவிட்டனர். நடிகர் சஞ்சய் கபூரின் மகள், அமிதாப்பச்சனின் மகள், பேரக்குழந்தைகளும் சினிமாவில் பயணித்து வருகின்றனர். 2025ல் மட்டும் 4 வாரிசுகள் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளனர்...
இவர்களில் இருந்து ஆரவ் பாடியா சற்று வித்தியாசமாக இருக்கிறார். சினிமாவை விடுத்து படிப்பில் தீவிரம் காட்டி வரும் அவர், அதற்காக 15 வயதிலேயே பெற்றோரை பிரிந்து சென்றார். கல்லூரி படிப்பிற்காக சிங்கப்பூர் சென்ற ஆரவ் அங்கு பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து லண்டன் சென்ற அவர் அங்கு தற்போது பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். பிரபல சினிமா குடும்ப வாரிசாக இருந்தாலும், ஆரவ் இதுவரை பொதுநிகழ்வில் கலந்துகொண்டது அரிது. மேலும் சமூக வலைதளங்களிலும் ஆரவ் கிடையாது...
பாலிவுட் சினிமா இவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராக இருந்தாலும், அதனை வேணாம் எனக் கூறி எளிமையான வாழ்க்கையையே ஆரவ் வாழ விரும்புவதாக அக்சய் குமார் ஒருமுறை கூறினார். மேலும் ஆரவிற்கு சினிமாவிலும் ஈடுபாடு இல்லை என்பதையும் அந்தப் பேட்டியில் அக்சய் வெளிப்படுத்தியிருக்கிறார்...
ஆரவ் எந்த அளவுக்கு எளிமையானவர் என்பதை விளக்கிய அக்சய், தனது உணவை தானே சமைக்கும் ஆரவ், துணிகளையும் தானே துவைத்துக்கொள்வாராம். மேலும், தனக்கென பணியாட்கள் இருப்பதையும் ஆரவ் விரும்பமாட்டான் என்றும் வெளிப்படுத்தினார். ஷாப்பிங் கூட ஆடம்பரமாக இருக்காது, சிறிய கடைகளில் தனக்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வார் என்றும் குறிப்பிட்டுள்ளார்...
பார்ப்பதற்கு தனது தாத்தா ராஜேஷ் கண்ணா போலவே இருக்கும் ஆரவ்விற்கு சிறிய வயதில் இருந்தே எதையாவது புதிதாக உருவாக்கவேண்டும் என்பதில் ஆர்வம் அதிகம். அதன்காரணமாக பேஷன் டிசைன் படிப்பை தேர்ந்தெடுத்து படித்து வரும் அவர், அந்த துறையிலேயே தனது எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று உழைத்து வருவதாகவும் அக்சய் தெரிவித்துள்ளார். ஆரவ் பற்றிய கூடுதல் தகவல் தோடு ஜூடோ விளையாட்டில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற வீரர் அவர்...