நான் செய்த பிழைகளை.. சர்ச்சைக்கு மத்தியில் இந்திரஜா வெளியிட்ட வீடியோ.. இது புதுசா இருக்கே! குவியும் பாராட்டு

நான் செய்த பிழைகளை.. சர்ச்சைக்கு மத்தியில் இந்திரஜா வெளியிட்ட வீடியோ.. இது புதுசா இருக்கே! குவியும் பாராட்டு
இந்திரஜா வெளியிட்ட வீடியோ.. இது புதுசா இருக்கே! குவியும் பாராட்டு

சென்னை: நடிகர் ரோபோ சங்கரின் மகளான இந்திரஜா சங்கர் பற்றிய செய்திகள் தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய ஆறு மாத குழந்தைக்கு மூளை பயிற்சி வகுப்பில் சேர்த்தது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பலர் இதை விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இன்று இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோவிலில் தான் பாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

சோசியல் மீடியா பயன்படுத்துவதும் பலருக்கும் பரீட்சயமான குடும்பம் என்றால் அது ரோபோ சங்கரின் குடும்பமாக இருக்கும். ரோபோ சங்கர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, அது இது எது உட்பட பல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து தமிழ் சினிமாவிலும் அடி எடுத்து வைத்து இப்போது காமெடியனாகவும் கதாநாயகனாகவும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்

ரோபோ சங்கரின் ஒரே மகளான இந்திரஜா விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் அடைந்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறத்திருக்கிறது. குழந்தை பிறந்து ஆறு மாதம்தான் ஆகிறது.

சோசியல் மீடியா பக்கத்தில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இந்திரஜா சங்கர் திருமணம் பெரிய அளவில் பேசப்பட்டது நடிகை நயன்தாரா தன்னுடைய திருமண வீடியோக்களை netflix க்கு விற்றதை போல இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் கார்த்திக் திருமண வீடியோவை பிரபல தனியார் youtube சேனலுக்கு விற்றிருந்தனர். அந்த youtube சேனலில் இந்திரஜாவின் எங்கேஜ்மென்ட், திருமணம், வளைகாப்பு என எல்லாமே நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது

அதுபோல இந்திராவும் அவருடைய குடும்பத்தினரும் சில youtube சேனல்களில் தொடர்ந்து பேட்டி கொடுத்து கொண்டு இருக்கின்றனர். இப்போது இந்திரஜாவிற்கு குழந்தை பிறந்ததும் குழந்தையின் ஐம்பதாவது நாள், நூறாவது நாள் என்று விதவிதமாக பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அந்த குழந்தைக்கு பெயர் சூட்டு விழா போன்றவற்றையும் பிரம்மாண்டமாக நடத்தி அதையும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

அதுபோல இந்திரஜாவிற்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் பல பிரமோஷன் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்காக இந்திரஜா மற்றும் அவருடைய கணவர் இருவரும் ப்ரோமோஷன் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் பேசப்பட்டது. அதாவது தன்னுடைய ஆறு மாத குழந்தைக்கு மூளை பயிற்சி கொடுக்கும் ஸ்கூல் என்று ஒரு பள்ளியை பிரபலப்படுத்தி இருந்தனர்.

அதோடு தமிழ்நாட்டில் இப்போது உள்ள குழந்தைகளின் மூளைத்திறன் குறைவாக இருப்பதாகவும் அதில் கூறி இருக்கிறார்கள். ஆனால் அது தவறு என்று தமிழக அரசின் உண்மையை சரிபார்க்கும் குழு உறுதிப்படுத்தி இருக்கிறது. இப்படி சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கும் இந்திரஜா இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது குருபூர்ணிமாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு இந்திரஜா பாடி இருக்கிறார். அவர் பாடியதை அங்கிருந்து அனைவரும் திரும்ப பாடி இருக்கிறார்கள். அப்போது "நான் செய்த பிழைகளை எல்லாம் பொறுப்பாய் அம்மா" என்ற பாடலை இந்திரஜா பாடியிருக்கிறார். அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இவரை பற்றிய சர்ச்சைகளுக்கு மத்தியில் இவர் கூலாக கடவுளிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறாரே என்று பலரும் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல அதிகமானோர் இவருடைய பாடலை பாராட்டி இருக்கிறார்கள்.