விடாமல் கொட்டும் மழை..

விடாமல் கொட்டும் மழை..
இரவு முழுக்க விடாது போலயே.. சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு அலர்ட்.

சென்னை: தமிழகத்தில் நெல்லை, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வருகின்றது. நேற்று இரவு பெய்யத் தொடங்கிய மழை இன்று இரவு வரை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நெல்லை, தென்காசி உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாகவே தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது...

நள்ளிரவு 1 மணி வரை

லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. நேற்று முன் தினம் குமரி, தென்காசி, நெல்லையில் ஒருசில இடங்களில் பெய்யத் தொடங்கிய மழை விட்டு விட்டு இன்று இரவு வரை தொடர்ந்தது. தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரித்தது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது...

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் நள்ளிரவு 1 மணி வரை திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, திருப்பூர், கருர், குமரி, தென்காசி, நெல்லை மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

கனமழை பெய்யும் இடங்கள்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது...

நாளை எங்கெல்லாம் கனமழை பெய்யும்

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள், திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25 ஆம் தேதி வரை மழை

22 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது...

23ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24-07-2025 மற்றும் 25-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்...

சென்னையில் எப்படி

இன்று (20-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது...