சென்னை தாம்பரம் அருகே இரவில் சிக்கன் சாப்பிட்டவர்.. காலையில் உயிருடன் இல்லை.. என்ன நடந்தது?

சென்னை : தாம்பரம் சேலையூர் அருகே உள்ள அகரம்தென், வெங்கம்பாக்கத்தில் தனியார் கட்டிட நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 4 பேர் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இவர்கள், வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் கோழி கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர்.ஆனால் அந்த சிக்கன் கெட்டுப்போன நிலையில் இருந்ததா அல்லது வேறு என்ன காரணம் என்பது தெரியவில்லை.. ஆனால் கோழிக்கறி சமைத்து சாப்பிட தொழிலாளி ஒருவருக்கு எமனாக மாறி உள்ளது. மருத்துவமனையில் தொழிலாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கோழிக்கறி விஷமாக மாறுவது ஏன்
நன்கு சமைக்காத கோழிக்கறி விஷமாக மாறுவது பல்வேறு இடங்களில் நடந்ததை கேள்விப்பட்டிருப்போம். சால்மோனெல்லா மற்றும் காம்பிலோபாக்டர் போன்ற பாக்டீரியாக்கள் கோழிக்கறியில் இயல்பாகவே இருக்கிறது. எனவே அவை சரியாக சமைக்கப்படாவிட்டால் அல்லது பாதுகாக்கப்படாவிட்டால் விஷமாக மாறலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், நீண்ட நேரம் சமைக்காமல் வைத்திருந்தாலோ அல்லது மீண்டும் சூடாக்கும்போதோ, கோழிக்கறியில் உள்ள பாக்டீரியாக்கள் பெருகி உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்
கெட்டுப்போன சிக்கன்
பொதுவாகவே கெட்டுப்போன சிக்கன் என்றால், அதை சமைத்து சாப்பிட்டாலும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிக்கன் கடையில் விற்காமல் காலை முதல் மாலை வரை தொங்கவிட்டிருப்பார்கள். அப்படிப்பட்ட சிக்கனை வாங்கி வந்து இரவில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். தாம்பரம் பகுதியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போ
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள அகரம்தென், வெங்கம்பாக்கத்தில் தனியார் கட்டிட நிறுவனத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 60 வயதாகும் ஐதர் சக் , 38 வயதாகும் அலிஉசேன் உள்பட 4 பேர் அங்கேயே தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார்கள். நேற்று முன்தினம் இரவு இவர்கள், வெங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கடையில் கோழி கறி வாங்கி வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர்
.
அப்போது அவர்களுக்கு திடீரென உணவு செரிமானம் ஆகாமல் வயிற்று வலியால் ஒருவர் பின் ஒருவராக எழுந்து அலறியுள்ளனர். நேற்று அதிகாலை ஐதர் சக், அலிஉஷேன் ஆகியோர் கடுமையான வயிற்று வலியால் துடித்தனர். இதனால் 2 பேரையும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஐதர் சக் பரிதாபமாக இறந்துவிட்டார். அலிஉஷேனுக்கு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கெட்டுப்போன கோழி கறியை சாப்பிட்டதால் ஐதர்சக் இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.