ஆந்திராவில் வங்கியின் தவறு.. புலம்பும் போலீஸ்.. பல கோடி தங்கம், 38 லட்சம் பணம் கொள்ளை போனது எப்படி

திருப்பதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் தூமுகுண்டா தொழிற் பூங்காவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி இயங்கி ஒன்று இயங்கி வருகிறது.இந்த வங்கியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வங்கியின் பின்பக்க கதவை வெல்டிங் எந்திரம் மூலமாக கொள்ளையர்கள் உடைத்து 10 கிலோ தங்கத்தையும், ரூ.38 லட்சத்தையும் அள்ளிச்சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நடப்பதற்கு வங்கி நிர்வாகம் செய்த ஒரு தவறு தான் காரணம் என்றும் போலீசார் குற்றம்சாட்டுகிறார்கள். எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பதை பார்ப்போம்...
என்ன தான் பாதுகாப்பு வசதிகள், சிசிடிவி கேமராக்கள் இருந்தாலும், மனிதர்களும் பாதுகாப்புக்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் வங்கிகளில் நடக்கலாம் என்பதற்கு ஆந்திராவில் நடந்த சம்பவம் உதாரணமாகும், ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்யசாயி மாவட்டம் தூமுகுண்டா தொழிற் பூங்காவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர்..
போலீசுக்கு தகவல்
அங்கு வங்கியில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் ,பணம் மிகப்பெரிய அளவில் கொள்ளை போனது குறித்து தகவல் போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீசத்யசாயி மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது..
எப்படி கொள்ளை நடந்தது
இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வங்கியின் பின்பக்க கதவை வெல்டிங் எந்திரம் மூலமாக கொள்ளையர்கள் உடைத்து இருப்பது தெரியவந்தது. பின்னர் வங்கிக்குள் நுழைந்து முதலில் கண்காணிப்பு கேமராக்களின் இணைப்பை துண்டித்து உள்ளார்கள். அதன்பின்னர் நகை, பணம் இருந்த அறையின் கதவையும், லாக்கரையும் வெல்டிங் எந்திரத்தின் உதவியோடு மர்மநபர்கள் உடைத்து, அங்கிருந்த 10 கிலோ தங்கநகைகளையும், ரூ.38 லட்சத்தையும் அள்ளிச்சென்றிருக்கிறார்கள்.
தனிப்படை அமைப்பு
கொள்ளையர்களை பிடிக்க டிஎஸ்பி மகேஷ், இன்ஸ்பெக்டர் அப்துல்கரீம் ஆகியோர் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்படை போலீசார் சிசிடிவி காட்சிகள், செல்போன் பேச்சுக்கள், அந்த பகுதியில் சென்ற வாகனங்கள் ஆகியவற்றின்அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்...
வங்கியின் தவறு என்ன
பல கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் பணம் இருந்த வங்கியில் டந்த 4 ஆண்டுகளாக காவலாளி பணியில் இல்லை என்றும், இதுதொடர்பாக பலமுறை எச்சரித்தும் வங்கி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றும் போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். வங்கியின் இந்த தவறும் கொள்ளை போனதற்கு காரணமாக இருப்பதாக ஊர் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்..