பெங்களூர், ஹைதராபாத்துக்கு நோ.. தென்னிந்தியாவின் ஹாட் ஸ்பாட்டாக உருவெடுத்த கோவை.. எதிர்க்கவே இல்லையே

பெங்களூர், ஹைதராபாத்துக்கு நோ.. தென்னிந்தியாவின் ஹாட் ஸ்பாட்டாக உருவெடுத்த கோவை.. எதிர்க்கவே இல்லையே
பொறியியல் திறமை மற்றும் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது..

சென்னை: இந்தியாவின் முக்கியமான உலகளாவிய திறன் மையமாக (GCC) கோவை உருவெடுக்க தொடங்கி உள்ளது. இதற்கு இங்குள்ள வலுவான தொழில் சூழல், பொறியியல் திறமை மற்றும் வளர்ந்து வரும் உள்கட்டமைப்பு வசதி ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது..

கோயம்புத்தூரில் செய்யப்படும் முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெங்களூர் , சென்னை, ஹைதராபாத் போன்ற பெரிய நகரங்களுக்கு போட்டியாக மாறும் அளவிற்கு இங்கே முதலீடுகள் குவிந்து வருகின்றன...

ஆழமான பொறியியல் திறனாலும், உறுதியான தொழில்துறை பாரம்பரியத்தாலும் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கோவையில் தங்கள் GCC-களை உருவாக்கவோ அல்லது விரிவுபடுத்தவோ விரும்புகின்றன. தற்போது 60-க்கும் மேற்பட்ட GCC நிறுவனங்களும், 75,000-க்கும் அதிகமான வல்லுநர்களும் கொண்ட இந்த நகரம், கவர்ச்சிகரமான 'கோவை அட்வான்டேஜ்'-ஐ வழங்குகிறது. இந்த நன்மைகளில் போட்டி விலையிலான ரியல் எஸ்டேட், செலவினங்கள், சிறந்த கல்வியறிவு விகிதம் மற்றும் 250-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்கள் மற்றும் 23 இன்குபேட்டர்களுடன் கூடிய ஸ்டார்ட்அப் கலாச்சாரம் ஆகியவை அடங்கும்...

கோவை: திறன் மையமாக உருவெடுத்தல்

இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) உடன் இணைந்து CBRE தெற்கு ஆசியா என்ற அமைப்பு 'கோயம்புத்தூர்: GCCக்கான அடுத்த இடம்' என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவில் GCC துறை ரீதியான முதலீட்டில் இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள் 2025-ஆம் ஆண்டுக்குள் 15-20% பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...

2030-ஆம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப சூழலில் GCC-கள் தங்கள் சந்தை அளவு, பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் திறன்களை கணிசமாக அதிகரிக்கும். தமிழ்நாடு இந்தியாவின் GCC வளர்ச்சியில் தனது தலைமைத்துவத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. கோயம்புத்தூர் ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. கோவை இதில் முன்னிலை வகிக்கிறது. கோவை ஆழமான தொழில்துறை பலத்துடன் தொழில்நுட்பம் சார்ந்த சூழலியலையும் கொண்டுள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது..

கடந்த 2 வருடங்களாகவே கோவையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. அங்கே தொழில் செய்வதற்கு ஏதுவான சூழல் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கு முன்பாக கடந்த 2023ம் வருடம் ஜூலை மாதம் தமிழ்நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இந்த மாநாடு நடைபெற்றது. மொத்தம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதில் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் 1.25 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டு உள்ளன. அப்போதும் கோவையில் அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..

வளரும் கோவை: ஏற்கனவே இந்தியாவில் வளரும் நகரங்களில் ஒன்றாக கோவை உள்ளது. லக்னோ, கொச்சி, ஜெய்ப்பூர் மற்றும் புவனேஸ்வர் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் 10 நகரங்களாக உருவெடுத்து உள்ளதாக CREDAI மற்றும் Cushman & Wakefield நிறுவனங்களின் அறிக்கை தெரிவித்துள்ளது...

ரியல் எஸ்டேட் அமைப்பான CREDAI மற்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் நிறுவனமான குஷ்மேன் & வேக்ஃபீல்ட் ஆகியவைஎகிப்தில் உள்ள 21வது NATCON இல் 'இந்தியாவின் அடுத்த 10 வளர்ந்து வரும் சந்தைகள்: வணிக ரியல் எஸ்டேட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான நிறுவனங்கள்' என்ற அறிக்கையை வெளியிட்டன...

இதில்தான் இந்த 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்து வரும் அடுத்த பெரிய நகரம் கோயம்புத்தூர்தான் என்று இந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .

???? இந்தூர்

????கொச்சி

????திருவனந்தபுரம்

????கோயம்புத்தூர்

????லக்னோ

????விசாகப்பட்டினம்

????சூரத்

????வதோதரா

????நாக்பூர்

????நாசிக்

ஆகியவை இந்த லிஸ்டில் இடம்பெற்றுள்ள நகரங்கள் ஆகும்