சென்னை வண்டலூரில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊமனாஞ்சேரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்ப உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காப்பகத்திற்கு ஆய்வுக்கு வந்த குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமானது.