வெறும் 10 நாட்களில் 2 மடங்கு லாபம்.. கொட்டிய பணமழை.! பங்குச்சந்தை டிப்ஸ்களை அள்ளி கொடுத்த AI

வெறும் 10 நாட்களில் 2 மடங்கு லாபம்.. கொட்டிய பணமழை.! பங்குச்சந்தை டிப்ஸ்களை அள்ளி கொடுத்த AI
டிப்ஸ்களை அள்ளி கொடுத்த AI

நியூயார்க்: ஏஐ ஆதிக்கம் இந்தக் காலத்தில் சந்தேகமே இல்லாமல் அதிகரித்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் ஏஐ வேகமாக வளர்ந்து வருகிறது. இதற்கிடையே ஏஐ டூல் ஒன்றை வைத்து நெட்டிசன் ஒருவர் பங்குச்சந்தையில் டிரேட் செய்துள்ளார்.

அதில் வெறும் 10 நாட்களில் பணம் இரட்டிப்பாக்கி இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.இந்தக் காலத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ டூல்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. மருத்துவம், டீச்சிங் தொடங்கி ஏகப்பட்ட துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்தே வருகிறது. ஏஐ வருகையால் நமக்கு மிகப் பெரிய பலன் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. முன்பு பல மணி நேரம் எடுத்துச் செய்த வேலைகளைக் கூட இப்போது சில நொடிகளில் செய்து முடித்துவிட முடிகிறது. இந்த ஏஐட டூல்களை பலரும் பல விதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏஐ டூல்கள்

அப்படி இங்கு ஒருவர் ஏஐ டூல்களை டிரேடிங் செய்யப் பயன்படுத்தி இருக்கிறார். சாட்ஜிபிடி மற்றும் கிராக் உள்ளிட்ட ஏஐ டூல்கள் கொடுத்த முதலீட்டு ஆலோசனைகளைக் கேட்டு இந்த நபர் வெறும் பத்து நாட்களில் தனது பணத்தை இரட்டிப்பாக்கியதாகக் கூறியிருக்கிறார். இது தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் தனது ரெட்டிட் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

நான் சில் செய்துகொண்டே சாட்ஜிபிடி எனக்குப் பணம் சம்பாதிப்பதைப் பார்க்கிறேன்! என்று அவர் இந்தப் பதிவை விளக்கியுள்ளார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது. டிரேடிங்கில் தனது திட்டங்களை விட சாட்ஜிபிடி சிறப்பாகச் செயல்படுகிறதா என்பதைக் கண்டறிய இரு வாரங்களுக்கு முன்பு முடிவு செய்துள்ளார்.

இரண்டு மடங்கு

இதற்காக 400 டாலரை அவர் பிரபல டிரேடிங் தளத்தில் தனது கணக்கில் போட்டுள்ளார். முதல் நாளே அவர் போட்ட பணம் இரட்டிப்பாகிவிட்டதாம். இதனால் முதல் நாளே அவருக்கு செம குஷி. பிறகு சில நாட்களில் அவருக்கு இன்னொரு ஐடியா தோன்றி இருக்கிறது. சாட்ஜிபிடி மற்றும் கிராக் இரண்டில் எது சரியாக முதலீட்டு ஆலோசனைகளைத் தருகிறது என்பதைத் தெரிந்து கொள்ள அவர் முயன்றுள்ளார்

இதற்காக அவர் தனது போர்ட்ஃபோலியோவை இரண்டாகப் பிரித்துப் போட்டு இருக்கிறார். சாட்ஜிபிடி மற்றும் கிராக் இரண்டிற்குமே மிக விரிவான டேட்டாவை கொடுத்துள்ளார். இரண்டிற்குமே பக்கம் பக்கமாக டேட்டா, ஸ்ப்ரெட் ஷீட், ஆப்ஷனில் செயின் என அனைத்தையும் கொடுத்திருக்கிறார். இரண்டு ஏஐ டூல்களும் அந்த டேட்டாவை ஆய்வு செய்து டிரேடிங் ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறது.

வென்றது யார்!

10 நாட்களில் அதன் டிரேடிங் முடிவுகள் அவருக்கு அதிர்ச்சி தருவதாக இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் மேலும், "இதன் மூலம் நான் மொத்தம் 18 டிரேட் செய்தேன். 17 டிரேட்டை முடித்துவிட்டேன்.. எப்படியோ தெரியவில்லை இரண்டு ஏஐ டூல்களுமே 100% வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளனர். சாட்ஜிபிடி கொடுத்த 13 ஆலோசனைகளில் அனைத்திலும் லாபம்.. கிராக் தந்த 5ல் அனைத்தும் லாபம். இதுவரை இரண்டுமே என்னை ஏமாற்றவில்லை. அடுத்த ஆறு மாதங்களில் இந்த ஏஐ எவ்வளவு தூரம் போகிறது என்று பார்க்க நான் ஆர்வமாக உள்ளேன். இது சூப்பர் அனுபவமாக இருக்கிறது" என்றார்

அவரது போஸ்ட் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நெட்டின்சகள் பலரும் இந்த போஸ்ட்டை பகிர்ந்து வருகிறார்கள். அதேநேரம் சிலர் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வலியுறுத்தி வருகிறார்கள். குறுகிய லாபம் ஓகே.. ஆனால் நஷ்டம் வந்தால் அது பெரிதாக இருக்கும் என்பதால் ஏஐ-யை முழுமையாக நம்பக்கூடாது என்றே நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.

எச்சரிக்கை

பங்குச்சந்தை வல்லுநர்கள் பொதுவாகவே டிரேடிங்கில் எச்சரிக்கையாக இருக்கவே வலியுறுத்துவார்கள். டிரேடிங் என்பது சாதாரண விஷயம் இல்லை.. 24 மணி நேரமும் சிஸ்டத்தில் முன்பு உட்கார்ந்து மார்கெட்டை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியாவில் டிரேடிங் செய்யும் 10 பேரில் 9 பேர் நஷ்டத்தையே எதிர்கொள்கிறார்கள். இதனால் ஏஐ சொல்வதை எல்லாம் கேட்டு டிரேட் செய்யக்கூடாது என்பதே வல்லுநர்களின் ஆலோசனையாக இருக்கிறது.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.