கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக இணைய எவ்வாறு விண்ணப்பிப்பது?

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக இணைய எவ்வாறு விண்ணப்பிப்பது?
தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது

****AGNISIRAGU****

வரும் ஜூலை 15 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தகுதியான பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதம் ரூ.1000 பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு வெகு சிறப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. விரைவில் பிரம்மாண்டமாக இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதுவரை இந்த திட்டத்தில் பயன்பெறாத தகுதியான குடும்பதலைவிகள் உள்ளிட்டோர் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் ஒரு முக்கியமான சமூக நலத் திட்டமாகும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது.

2023 செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில், தமிழ்நாட்டில் சுமார் 1.16 கோடி பெண்கள் முதல்கட்டமாக பயனடைந்தனர். மேல்முறையீடு மூலம் 1.48 லட்சம் புதிய பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுவோர், விதவை ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்டவர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக 2023-24 நிதியாண்டில் 8,123.83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து 2024-25 நிதியாண்டில் 13,722.47 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

****AGNISIRAGU****