ரூ.4 கிலோ தங்கத்துடன் ஓட்டம்: டில்லி நகைக்கடை மேலாளர் ஊட்டியில் கைது

சென்னை: 4 கிலோ தங்கத்துடன் தப்பி ஒடிய டில்லி நகைக்கடை மேலாளர், ஊட்டியில் கைது செய்யப்பட்டார்.
டில்லியின் கரோல் பாக் நகரில் உள்ள விஷால் செயின்ஸ் நகைக்கடை ஷோரூமில், குலாபி பாஹ்கில் உள்ள பிரதாப் நகரில் வசித்துவரும் மனோஜ், என்பவர் கடந்த 2014 ஆண்டு முதல் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
மனோஜ், 80 கிலோ தங்க நகைகள் நிர்வகித்து வந்தார். இந்நிலையில் 4 கிலோ தங்க நகையுடன் திடீரென எடுத்துக்கொண்டு தப்பிவிட்டார்.
இதனை தொடர்ந்து ஜூவல்லரி உரிமையாளர் தப்பி ஓடிய மனோஜ் மீது ஜூலை 1ம் தேதி புகார் அளித்தார். இதனிடையே மனோஜ் உடைய மனைவியும் கணவர் காணாமல் போனதாக கரோல் பாஹ் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:
4 கிலோ தங்க நகைகளுடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் நகை கடை மேலாளர் மனோஜ், தமிழகத்தின்
ஊட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று கைது செய்யப்பட்டார்.
பல்வேறு மாநிலங்களில் 3,200 கிலோமீட்டர் துாரம் பயணம் செய்த மனோஜ் 36 ,விரிவான தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் மனோஜ், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் கடந்த ஜூன் 26ம் தேதி முதல் வேலைக்கு வரவில்லை என்றும் ஜூன் 29ம் தேதி கணவர் காணாமல் போனதாக புகாரில் கூறியிருந்தார். காணமல் போன மனோஜ் மீது ஜூலை 3ம் தேதி எப்.ஐ.ஆர் போடப்பட்டது.
அதனை தொடர்ந்து சிறப்புக்குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது. டில்லி, உபி, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வலை வீசி தேடியதில் தமிழகத்தின் ஊட்டியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மனோஜை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் தங்கம் 2.3 லட்சம் ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்கள் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்