மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்

மயிலாடுதுறையில் வாகனம் பறிக்கப்பட்டதால் அலுவலகத்துக்கு நடந்தே சென்ற காவல் துணை கண்காணிப்பாளர்
அலுவலகத்துக்கு நடந்து சென்ற டிஎஸ்பி சுந்தரேசன்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை​யில் வாக​னம் பறிக்​கப்​பட்​ட​தாக கூறப்​படும் நிலை​யில், தனது அலு​வல​கத்​துக்குகாவல் துணைக் கண்​காணிப்​பாளர் நடந்து சென்ற வீடியோ, சமூக வலை​தளங்​களில் வைரலாகி பரபரப்பை ஏற்​படுத்​தி​யது. மயி​லாடு​துறை மாவட்ட மது​விலக்கு அமலாக்​கப் பிரிவு டிஎஸ்​பி​யாக கடந்த ஆண்டு நவம்​பர் முதல் சுந்​தரேசன் பணி​யாற்றி வரு​கிறார்.

சட்​ட​விரோத மது, சாரா​யம் கடத்​தலில் ஈடு​படு​வோர் மீது இவர் கடும் நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறார். இந்​நிலை​யில், இவரது வாக​னத்தை பறித்​துக் கொண்​ட​தால், டிஎஸ்பி சுந்​தரேசன் வீட்​டில் இருந்து அலு​வல​கத்​துக்கு நடந்து செல்​லும் வீடியோ சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதுகுறித்து டிஎஸ்பி சுந்​தரேசன் கூறிய​தாவது: கடந்த 5-ம் தேதி அமைச்​சரின் பாது​காப்பு பணிக்​காக எனது வாக​னத்தை மாவட்ட காவல் துறை தரப்​பில் கேட்​டார்​கள். எழுத்​துப்​பூர்​வ​மாக உத்​தரவு பிறப்​பித்​தால் வாக​னத்தை வழங்​கு​வ​தாக தெரி​வித்​தேன். இதனால், என்னை திருச்​செந்​தூர் கும்​பாபிஷேக பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பி​வைத்​தனர். அந்​தப் பணி முடிந்து திரும்​பிய பின்னர், முதல்​வர் வருகை பாது​காப்​புப் பணிக்கு அனுப்​பினர்.

அந்​தப் பணியை முடித்​து​விட்டு திரும்​பிய​போது, அமைச்​சர் பாது​காப்பு பணிக்கு எனது வாக​னத்தை தரு​மாறு மீண்​டும் கேட்டனர். அந்த வாக​னம் அவ்​வப்​போது பழு​தாவ​தாக கூறியதை​யும் கேட்​காமல், கடந்த 10-ம் தேதி வாக​னத்தை வாங்​கிக் கொண்டனர். இது​வரை அந்த வாக​னத்தை திரும்ப வழங்​க​வில்​லை. இதனால் 2 நாட்​களாக அலு​வல​கத்​துக்கு நடந்தே சென்​றேன்.

நான் பொறுப்​பேற்​றது முதல் சாரா​யம், புதுச்​சேரி மது விற்​பனையை கட்​டுக்​குள் கொண்டு வந்​த​தால், சிலரது வரு​மானம் பாதிக்​கப்​பட்​டு​விட்​டது. இது தொடர்​பாக என்னை அழைத்​துப் பேசிய உயர​தி​காரி, வளைந்து கொடுத்து போகா​விட்​டால், விரலை உடைத்​து​விடு​வார்​கள் என்று கூறி​னார்

நான் நேர்​மை​யாக இருப்​ப​தால் பல்​வேறு சிக்​கல்​களை அனுபவிக்​கிறேன். மனித உரிமை ஆணை​யத்​தில் பணி​யாற்​றிய​போது, ஒரு வழக்​கில் தொடர்​புடைய காவல் துறையை சேர்ந்த சிலர் மீது புகார் கொடுத்​த​தால், என்னை பழி​வாங்​கு​கிறார்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

எஸ்​.பி. மறுப்பு... எஸ்​.பி. ஸ்டா​லின் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “டிஎஸ்பி சுந்​தரேசனின் வாக​னம் பெறப்​பட்​ட​தில் முறை​யான நடை​முறை​கள் பின்​பற்​றப்​பட்​டன. மாவட்ட காவல் துறை​யில் இருந்து அழுத்​தம் தரப்​படு​வ​தாக அவர் கூறியதும், வளைந்து போகச் சொன்​ன​தாக கூறியதும் தவறான தகவல். அவ்​வாறு எந்த அழுத்​த​மும் தரப்​பட​வில்​லை. வழக்​க​மான நடை​முறைபடி​தான் அவர் பாது​காப்பு பணிக்கு அனுப்​பப்​பட்​டார்” என்​றார்​.

அண்ணாமலை கண்டனம்: ​பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்​ணா​மலை சமூக வலை​தளப் பக்​கத்​தில் பதி​விட்​டிருப்​ப​தாவது: மயி​லாடு​துறை​யில் சட்​ட​விரோத மது விற்​பனை​யில் ஈடு​படு​பவர்​கள், போதைப் பொருள்​கள் விற்​றவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுத்​து, மக்​களின் பாராட்​டு​களைப் பெற்​றவர் டிஎஸ்பி சுந்தரேசன். அவரது நேர்​மை​யான நடவடிக்​கைகள் பிடிக்​காமல், அவமானப்​படுத்​தும் நோக்​குடன், அவரது வாக​னத்தை திரும்​பப் பெற்​றுள்​ளனர்.

இதனால் அவர் நடந்தே அலு​வல​கம் சென்​றது அதிர்ச்சி அளிக்​கிறது. மக்​களுக்​காகப் பணி​யாற்​றும் அதி​காரியை அவமானப்​படுத்​து​வதும், அலைக்​கழிப்​பதும் வன்​மை​யாகக் கண்​டிக்​கத்​தக்​கது. தமிழக காவல் துறை​யினரின் தன்​மானத்​தைப் பாது​காக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அண்​ணா​மலை வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.