சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களுடன் பூமி திரும்பும் டிராகன் விண்கலம்

பூமிக்கு திரும்புவதற்காக சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்களத்திற்குள் சென்றனர்.
சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.
நாசாவின், கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பட்ட குழு சரியாக 28 மணி நேரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது. பின்னர், இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லாவுடன் சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
அமெரிக்காவின் பெக்கி விட்சன், சுபான்ஷூ சுக்லா, ஹங்கேரியின் திபோர், போலந்தின் ஸ்லாவேஜ் விண்வெளிக்கு சென்றுள்ளனர்.
அவர்களின் 14 நாட்கள் ஆய்வு முடிவடைந்த நிலையில், 4 பேரும் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்.
அதன்படி, பூமிக்கு திரும்புவதற்காக சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட குழுவினர் டிராகன் விண்களத்திற்குள் சென்றனர்.
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை புறப்படும் நிலையில், குழு நாளை மாலை பூமிக்கு திரும்பும் என கூறப்பட்டுள்ளது.
ஆக்சியம் 4 திட்டத்தில் சர்வதேச விண்வெளி மையம் சென்ற சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு நாளை திரும்புகிறது.
டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்பும் சுபான்ஷூ சுக்லா குழுவினர் நாளை கலிபோர்னியா கடற்கரையில் வந்து இறங்குவார்கள் என கூறப்பட்டது.
அதன்பவர், இக்குழு விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைய 22.5 மணி நேரம் ஆகும்.
சர்வதேச ஆய்வு மையத்தில் 7 முக்கிய ஆய்வுகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சோதனைகளை செய்துவிட்டு குழு திரும்புகிறது.
அறிவியல் உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சி மாதிரிகள் உள்ளிட்ட 580 பவுன்ட் எடைக்கு மேல் பொருட்களை குழு எடுத்து வருகிறது.
நாளை பூமி திரும்பிய உடன் நாசாவின் ஜான்சன் விண்வெளி மையம் செல்லும் குழுவினர் அங்கு மருத்துவ மேற்பார்வையில் இருப்பர்.
உடல் நிலை சீராக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பப்படுவர்.