ஜாம்பவான் லாராவுக்காக டிக்ளேர் செய்தேன்’ - வியான் முல்டர் விவரிப்பு

ஜாம்பவான் லாராவுக்காக டிக்ளேர் செய்தேன்’ - வியான் முல்டர் விவரிப்பு
ஜாம்பவான் லாராவுக்காக டிக்ளேர் செய்தேன்’

புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் வியான் முல்டர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.

ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 88 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 466 ரன்கள் குவித்தது. டோனி டி ஸோர்ஸி 10,லெசெகோ செனோக்வானே 3 ரன்களில் நடையை கட்டினர். டேவிட் பெடிங்காம் 82, லுவான் -ட்ரே பிரிட்டோரியஸ் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

வியான் முல்​டர் 259 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 34 பவுண்​டரி​களு​டன் 264 ரன்​களும், டெவால்ட் பிரே​விஸ் 15 ரன்​களும் சேர்த்து களத்​தில் இருந்​தனர். நேற்று 2-வது நாள் ஆட்​டத்தை தென் ஆப்​பிரிக்க அணி தொடர்ந்து விளை​யாடியது. வியான் முல்​டர் 297 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 38 பவுண்​டரி​களு​டன் முச்​சதம் அடித்​தார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்​கெட்​டில் விரை​வாக முச்​சதம் அடித்த 2-வது வீரர் என்ற சாதனையை அவர், படைத்​தார். இந்த வகை சாதனை​யில் இந்​தி​யா​வின் வீரேந்​திர சேவக் 2008-ம் ஆண்டு தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான டெஸ்​டில் 278 பந்​துகளில் முச்​சதம் அடித்து சாதனை படைத்து முதலிடத்​தில் உள்​ளார். டெஸ்ட் கிரிக்​கெட்​டில் முச்​சதம் அடித்த 2-வது தென் ஆப்​பிரிக்க வீரர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றார் வியான் முல்​டர். இதற்கு முன்​னர் ஹசிம் ஆம்லா (311) முச்​சதம் அடித்​திருந்​தார்.

வியான் முல்​டருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய டெவால்ட் பிரே​விஸ் 30 ரன்​களில் மட்​டிமிகு பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். தென் ஆப்​பிரிக்க அணி 114 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்க 626 ரன்​கள் குவித்த நிலை​யில் முதல் இன்​னிங்ஸை டிக்​ளேர் செய்​தது.

அப்​போது வியான் முல்​டர் 334 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 49 பவுண்​டரி​களு​டன் 367 ரன்​களும் கைல் வெர்​ரெய்ன் 42 ரன்​களும் சேர்த்து ஆட்​டமிழக்​காமல் இருந்​தனர். இந்த போட்​டி​யில் 367 ரன்​கள் விளாசி​யதன் மூலம் டெஸ்ட் அரங்​கில் தென் ஆப்​பிரிக்க அணிக்​காக அதிக ரன்​கள் விளாசிய வீரர் என்ற சாதனையை​யும் வியான் முல்​டர் நிகழ்த்​தி​னார். இதற்கு முன்​னர் ஹசிம் ஆம்லா 311 ரன்​கள் குவித்​திருந்​தார்.

சர்​வ​தேச டெஸ்ட் கிரிக்​கெட்​டில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​யின் பிரையன் லாரா விளாசிய 400 ரன்​களே இது​வரை ஓர் இன்​னிங்​ஸில் விளாசப்​பட்ட அதி​கபட்ச ரன்​களாக இருந்து வரு​கிறது. இந்த சாதனையை முறியடிக்க வியான் முல்​டருக்கு 34 ரன்​களே தேவை​யாக இருந்​தன. ஆனால் அவர், சாதனையை கருத்​தில் கொள்​ளாமல் டிக்​ளேர் முடிவை அறி​வித்து அனை​வரை​யும் ஆச்​சரி​யப்​படுத்​தி​னார்.

ஓர் இன்​னிங்​ஸில் அதிக ரன்​கள் குவித்த பேட்​ஸ்​மேன்​களின் பட்​டியலில் வியான் முல்​டர் (367) 5-வது இடத்தை பிடித்​துள்​ளார். இந்த வகை​யில் பிரையன் லாரா (400), மேத்யூ ஹைடன் (380), பிரையன் லாரா (375), ஜெய​வர்த்​தனே (374) முதல் 4 இடங்​களில் உள்​ளனர்

டிக்ளேர் செய்தது ஏன்? - முல்டர் விளக்கம்: “ஆட்டத்தில் நாங்கள் போதுமான ரன்கள் எடுத்திருந்தோம். அதோடு நாங்கள் பந்து வீச வேண்டும் என நினைத்தேன். பிரையன் லாரா ஜாம்பவான். அந்த சாதனையை தன்வசம் வைத்துக்கொள்ள அவர் தகுதியானவர். மற்றொரு முறை எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தாலும் இதையேதான் செய்வேன். லாரா ஜாம்பவான்” என வியான் முல்டர் தெரிவித்துள்ளார்.