. 1,12,400 மாத சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… BE, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

. 1,12,400 மாத சம்பளத்தில் மத்திய அரசில் வேலை… BE, டிப்ளமோ படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
மத்திய அரசில் உள்ள 1,340 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. https://ssc.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் காலியாக உள்ள 1340 இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்தப் பணிகளுக்கான கல்வித் தகுதியாக, CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது தகுதியை பொறுத்தவரையில், 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், எஸ்.சி, எஸ்.டி பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது

பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கணினி வழியில் நடைபெறும் எனவும், தமிழ்நாட்டில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும், விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 எனவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கான விண்ணப்ப இறுதி தேதி 21.07.2025 எனவும், பணி பெறுபவர்களுக்கு மாதம் ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை சம்பளம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது