சோம்பேறி ரெசிபி: 2 முட்டை, ஒரு கப் சாதம் போதும்... பேச்சுலர்சுக்கு பெஸ்ட்!

சோம்பேறி ரெசிபி: 2 முட்டை, ஒரு கப் சாதம் போதும்... பேச்சுலர்சுக்கு பெஸ்ட்!
சோம்பேறி ரெசிபி: 2 முட்டை, ஒரு கப் சாதம்

சமைக்கவே சோம்பேறித்தனமாக உணரும் நாட்களிலும், குறைந்த நேரத்தில் சுவையான ஒன்றை சமைக்க விரும்பும் போதும், இந்த எக் பெப்பர் ரைஸ் ஒரு சிறந்த தேர்வாகும். இதன் சுவை அலாதியானது, குறிப்பாக பேச்சுலர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காலையில் சமைக்க நேரம் இல்லை என்பவர்கள் கூட 5 நிமிடத்தில் இதை லஞ்ச் பாக்ஸ்க்கு செய்து கொடுத்துவிடலாம்.

இந்த எக் பெப்பர் ரைஸ் எப்படி செய்வது என்று காத்துவாக்குலசமையல் இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம். சமைக்க சோம்பேறித்தனமாக இருக்கும் நாட்களிலும், அல்லது குறைந்த நேரத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதும், இந்த எக் பெப்பர் ரைஸ் செய்து பாருங்கள். இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். பேச்சுலர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய்

வெங்காயம்

பீன்ஸ்

கேரட்

பச்சை மிளகாய்

இஞ்சி பூண்டு பேஸ்ட்

உப்பு

மிளகுத்தூள்

கரம் மசாலா

முட்டை - 2

வடித்த சாதம் 

கொத்தமல்லி

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் பீன்ஸ், கேரட், பச்சை மிளகாய் சேர்த்து அதையும் வதக்கி விடவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாடை போகும் வரை கிளறி விடவும்.

உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலா சேர்த்து, மசாலாக்கள் வேகும் வரை வதக்கி விடவும். இப்போது அதனுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி, முட்டை சுமார் 80% வேகும் வரை நன்கு வதக்கவும்.

அதன் பிறகு, பொழு பொழுவென வடித்த சாதத்தையும் சேர்த்து, அனைத்தும் ஒன்றாக கலக்கும் வரை நன்கு கிளறவும். கடைசியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால், சுவையான முட்டை மிளகு சாதம் தயார். சுட சுட சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். 

இதை மதியம் வேளையில் எடுத்துக்கொள்ளலாம். சாப்பிட நன்றாக இருக்கும். பேச்சுலர்ஸ்க்கு டெம்ப்டிங்காக இருக்கும்போது கூட இதை செய்து சாப்பிடலாம். சட்டுன்னு 5 நிமிடத்தில் செய்து விடலாம்

.