வட்ட வட்டமாக மினி தோசை... குட்டிக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

வட்ட வட்டமாக மினி தோசை... குட்டிக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!
உருளைக் கிழங்கு கொண்டு மினி மசாலா தோசை எவ்வாறு செய்யலாம் என்று இந்த சமையல் குறிப்பில் காணலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான வகையில் ருசியாக இருக்கும்.

குழந்தைகள் எல்லோரும் விரும்பி சாப்பிடும் வகையில் மினி உருளைக் கிழங்கு மசாலா தோசை செய்முறை குறித்து இதில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய்,

கடுகு, 

உளுத்தம் பருப்பு,

பச்சை மிளகாய்,

கறிவேப்பிலை, 

வெங்காயம்,

உருளைக் கிழங்கு,

உப்பு, 

மஞ்சள் தூள், 

பெருங்காயத்தூள்,

கொத்தமல்லி இலைகள்,

தோசை மாவு மற்றும்

நெய்.

செய்முறை:

வேண்டும். இதில் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். இதன் பின்னர், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக சுருங்கிய பின்னர், வேக வைத்த இரண்டு உருளைக் கிழங்கை மசித்து இதில் சேர்க்கவும். இத்துடன் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கலாம்.

இவை வதங்கிய பின்னர் அடுப்பை அணைத்து விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி, சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்தக் கலவை ஆறிய பின்னர், சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்

இதையடுத்து, தோசைக் கல்லை சூடாக்கி, இந்த உருண்டைகளை லேசாக தட்டி அதன் மீது வைக்க வேண்டும். இப்போது, இந்த மசாலா மீது சிறிதாக தோசை மாவை ஊற்றலாம். இதனுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான மசாலா மினி தோசை ரெடியாகி விடும். இதில் சிறிது நெய் தடவினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.