இதை கடைப்பிடித்தால் சின்க்கில் இனிப்பாத்திரமே சேராது!

சமைப்பதை விட பாத்திரம் கழுவது தான் மிகவும் கடினம். அதிலும் நிறைய சேர்ந்து விட்டால் அவ்வளவுதான்.
என் அனுபவத்தில் சிங்கில் எப்படி பாத்திரம் சேராமல் வைத்து கொள்வது என சிலவற்றை சொல்கிறேன்.
சமைக்கும்போதே முடிந்தவரை பாத்திரங்களை கழுவி வைத்து விடுங்கள்.
உதாரணமாக, புளி கரைத்த கிண்ணத்தை அப்படியே சிங்கில் போடாமல் ரசம் கொதிக்கும்போதே கழுவி வைத்து விடுங்கள்.
சமைத்து முடித்து வெளியே வரும் போது, சிங்கில் எந்த பாத்திரமும் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள்.
இது பெரிய அளவில் பயனளிக்கும்.
பால் காய்ச்சிய பாத்திரம் போன்றவற்றை சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தால், துலக்கும் போது அதிகம் தேய்க்க வேண்டியதில்லை.
முடிந்தால் தேநீர் பைகள் பயன்படுத்துங்கள். என் அனுபவத்தில் தேநீர் கொதிக்க வைத்த பாத்திரம் கழுவது எரிச்சல். வரும் யாராக இருந்தாலும்...
சாப்பிட்டு கை கழுவும் போதே தட்டையும் சேர்த்து கழுவி விடுங்கள். நான் எப்போதும் கடைபிடிக்கும் இந்த உத்தி சிறப்பான பலனளிக்கும்.
பாத்திரம் கழுவும் போது, பெரிய பாத்திரத்தில் இருந்து தொடங்குங்கள். விரைவில் சிங்க் காலியவதால் பெரிய சுமையாக தெரியாது.
அமாவாசை மற்றும் சிறப்பு நாட்களில் இலை வாங்கும்போது, சிறிய வாழை இலை தடுக்குகள் அதே கடையில் வாங்கி வைத்து கொள்ளுங்கள். மாலை சிற்றுண்டியை தட்டின்மீது இலை வைத்து பரிமாறுங்கள்.
கண்ணாடி, பீங்கான் பொருட்களை உபயோகியுங்கள்.
விளிம்புகள் தட்டையாக உள்ள பாத்திரங்கள், டம்ளர்கள் பயன் படுத்துங்கள். விளிம்புகள் மடித்து இருப்பதை விட இவை துலக்குதல் எளிது.