புதுச்சேரி பந்த்: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்க': அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை

புதுச்சேரி பந்த்: 'முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்க': அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை
புதுச்சேரி பந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரி பந்த் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா கூட்டணி தலைவர்களை கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் 9 ஆம் தேதி நடைபெற இருக்கும் பந்த் போராட்டத்தில் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்கும் விதத்தில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு கைது செய்ய வேண்டும்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தொழிலாளர் நலன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் 9ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை பொதுமக்களின் சகஜ வாழ்வு நிலைக்கு பாதிப்பில்லாமல் நடத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

புதுச்சேரியில் உள்ள திமுக, காங்கிரஸ் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இதற்கு நேர்மாறாக மக்களின் சகஜ வாழ்வுநிலை சீர்குலைக்கும் விதமாக பந்த் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.  

இதனால் வர்த்தக வியாபாரிகள், சிறிய நடுத்தர வியாபாரிகளும், காய்கறி, மீன், இறைச்சி விற்பனை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்பவர்களும் பாதிப்புக்கு ஆளாக்கப்படுவார்கள்.

புதுச்சேரிக்கு ரயில் மூலம் வருகை தரும் பயணிகள் ஆட்டோ இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். மக்களின் சகஜ வாழ்வை சீர்குலைக்கும் இந்த பந்த் போராட்டம் சட்டவிராத மானதாகும்.

மக்களுக்கு தொல்லை கொடுக்கும் விதத்தில் பந்த் போராட்டத்தை அறிவித்துள்ள மக்கள் விரோத அரசியல் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசு கைது செய்து பந்த் பாராட்டத்தை அரசு முறியடிக்க வேண்டும்.

தொழிற்சங்க உரிமை, தொழிலாளர் உரிமை, குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணி நேர பணி உரிமை ,பணி பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் எந்த அரசும் நீடித்ததாக வரலாறு இல்லை. அதேபோன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்களின் நலன் காக்கும் அரசாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆளும் தொழிலாளர் விரோத தி.மு.க அரசு தொழிலாளர்களின் நலனை நசுக்கும் பாசிச அரசாக உள்ளது. சாம்சங் உள்ளிட்ட இந்திய தொழில் முதலீட்டு தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் சங்கம் வைக்கும் உரிமையை கூட காவல் துறையை கொண்டு நசுக்கி வருகிறது

அரசு ஊழியர்களுக்கு எதிராக புதிய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் மீது திணைக்கிறது. ஊழியர்களின் மீது திணிக்கிறது பழைய ஓய்வுதத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அரசின் உத்திரவாதம் திமுக ஆட்சியில் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது

குறைந்தபட்ச ஊதியத்தில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர்கள், கிராம நல ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் நலன் காப்பாற்ற படவில்லை. விவசாய தொழிலாளர் நலன் திமுக அரசால் முற்றிலும் அழித்துவிட்டது.

கடந்த நான்காண்டு காலம் திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத பாலியல் வன்கொடுமைகள், சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கொலை ,கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் விற்பனை, லாக்கப் மரணங்கள், அறிவித்த திட்டங்கள் செயல்படுத்தாதது, அனைத்திற்கும் மேலாக மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் தொழிலாளர் பிரச்சினைக்காக புதுச்சேரியில் பந்த் நடத்துவதாக அறிவித்துள்ள திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் மேற்கூறிய தமிழக மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பிரச்சனைகளுக்கு சேர்ந்து போராட முன் வருவார்களா? குறைந்தபட்சம் தமிழக தொழிலாளர்கள் விரோத திமுக அரசின் முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்களின் சட்டவிராத ஆதரவு நிலையை கண்டிக்கும் துணிச்சல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஏன் இன்னும் வரவில்லை.

காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகளின் இந்த பந்த் போராட்டம் தொழிலாளர்கள் நலனுக்கானது அல்ல. இப்போராட்டம் அரசியலுக்காக சொல்லப்படும் நாடகமான பந்த் போராட்டம் ஆகும்.இந்த பந்த் போராட்டத்தை முறியடித்து மக்களுக்கு பாதிப்பு வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

9- ஆம் தேதி நடைபெற இருக்கும் பந்த் போராட்டத்தில் பாதிக்கப்படும் மக்களின் நலன் காக்கும் விதத்தில், இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு கைது செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு மாநில மக்களின் நலனுக்காகவும், மாநில உரிமைக்காகவும்,மாநில அந்தஸ்து வேண்டி அதிமுக சார்பில் நடைபெற்ற பந்து போராட்டத்தை முன்னிறுத்தி, அதிமுக தொண்டர்களை கைது செய்ய வேண்டுமென திமுகவின் கோரிக்கையை ஏற்று எங்களை புதுச்சேரி காவல்துறையினர் 

நல்இரவில் கைது செய்ததை, புதுச்சேரி டிஜிபி, எஸ்பி, எஸ்எஸ்பி , மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலர் உள்ளிட்ட அனைவருக்கும் நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன்.

திமுகவின் கோரிக்கையை ஏற்று பந்த் அறிவித்த அதிமுக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் இரவு நேரத்தில் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்ட உள்துறை அமைச்சர் மற்றும் முதல்வர் பந்த் அறிவிப்பாளர்களுக்கு வெண் சாமரம் வீசாமல் தங்கள் கடமையை பாராபட்சமின்றி செயல்படுத்த வேண்டும் இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.