ரியல் சூர்யவம்சம்.. சம்பளம் வாங்கும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.. அம்பானி போல் பில்லியனரானது எப்படி?

நியூயார்க்: கூகுள் நிறுவனத்தின் சிஇஓவும் ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலரை கடந்துள்ளது.. அதாவது 8000 கோடியை தாண்யுள்ளது. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் பங்குகளின் விலை பங்குச் சந்தையில் ஏற்றம் கண்டதால் இந்த அளவிற்கு சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அவர் மட்டும் கையில் இருந்து பங்குகளை விற்காமல் இருந்திருந்தால், இன்னும் ஒரு 8000 கோடி அவர் கையில் இருந்திருக்கும்.
தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை. சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்தவர், பட்டப்படிப்பை கரக்பூர் ஐஐடி-யிலும், மேற்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தார். கடந்த 2004-ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்தார். 2015 முதல் கூகுள் சிஇஓ பொறுப்பை கவனித்து வருகிறார். அதேபோல் கடந்தசில ஆண்டுகளாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் சிஇஓவாகவும் இருக்கிறார்.
பில்லியனர் ஆன சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் முதலாளிகளில் ஒருவர் இல்லை.. அங்கு வேலை செய்யும் தலைமை செயல் அதிகாரி மட்டுமே.. ஆனாலும் அவரது சொத்து மதிப்பு பில்லியனை தாண்டி உள்ளது. ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் சொத்து மதிப்பு பில்லியன் என்கிற அளவிற்கு மாறியிருப்பதை பலரும் ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.. மாத சம்பளம் வாங்கும் கூகுள் சிஇஒ சுந்தர்பிச்சை எப்படி ஒரு பில்லியனராக மாற முடியும் என்று நினைக்கிறீர்களா.. அந்த அளவிற்கா அவருக்கு சம்பளம் தந்துள்ளார் என்று நினைக்கிறீர்களா..கிடையாது.. ஆனாலும் அவர் அம்பானி போல் பில்லியனராக மாற ஏஐ காரணம்..
ஏஐ காரணம்
ஏஐ காரணமாக பல பேர் இன்று வேலையை இழந்து வருகிறார்கள். ஆனால் அந்த ஏஐயை உருவாக்கும் பணியில் உள்ள சுந்தர் பிச்சை பில்லியனராக மாறி உள்ளது. ஆல்பாபெட் இன்க் நிறுவனத்தின் மதிப்பு ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் வளர்ந்துள்ளது.இதன் காரணமாக அதன் முதலீட்டாளர்களுக்கு 120 சதவீதம் வருமானத்தை அள்ளி வழங்கி உள்ளது. இதில் பல முதலீட்டாளர்கள் பயன்பெற்றுள்ளனர்.
8000 கோடி சொத்து
அந்த வகையில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனர் அல்லாத சிஇஓ பிரிவில் 10 இலக்க சொத்து மதிப்பை கொண்டுள்ளவர்களின் பட்டியலில் ஒருவராக சுந்தர் பிச்சை இணைந்து இருக்கிறார். மிகவும் அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் மாத சம்பளம் வாங்கும் ஒருவர் பில்லியனர் ஆவது மிகவும் அசாதாரணமானது. தற்போது இந்திய ரூபாய் மதிப்பில் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு ரூ.8,000+ கோடி ஆகும்...
ஆல்பபெட் இன்க் பங்குகள் உயர்வு
சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு இப்படி உயர காரணம்.. ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு வருவாய் அதிகரிப்பு தான் காரணம்.. அதனால் பங்குகள் 4.1% வரை உயர்ந்தன. இது தான் சுந்தர்பிச்சையின் சொத்து மதிப்பு உயர காரணம் ஆகும். வளர்ச்சி அதிகரிப்பதால் ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் செலவின கணிப்பு 10 பில்லியன் டாலரில் இருந்து 85 பில்லியன் டாலராக இந்த ஆண்டு மாறி உள்ளது.
சுந்தர் பிச்சையின் சொத்துக்கள்
சுந்தர் பிச்சைக்கு ஏராளமான சொத்து இருந்தபோதிலும், ஆல்பாபெட்டில் 0.02% பங்குகளை மட்டுமே வைத்திருக்கிறார் . தற்போது இது சுமார் $440 மில்லியன் மதிப்புடையது ஆகும். ப்ளூம்பெர்க்கின் கூற்றுப்படி, அவரது நிகர மதிப்பில் பெரும்பகுதி பணமாக (டாலராக) இருக்கிறது.
கடந்த 10 வருடங்களில் அவர் $650 மில்லியன் மதிப்புள்ள ஆல்பாபெட் பங்குகளை விற்றுள்ளார். அவர் தனது பங்குகளைத் தக்க வைத்துக் கொண்டிருந்தால், அவரது பங்குகள் இப்போது $2.5 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. பங்குகளை விற்ற காரணத்தால் $1 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை சுந்தர் பிச்சை தவறவிட்டுள்ளார். இந்திய மதிப்பு 8000+ கோடி ரூபாய் லாபத்தை சுந்தர்பிச்சை தவறவிட்டுள்ளார்