Ration Card : தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை ரேஷன் கார்டு (Ration Card) சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்

Ration Card : தமிழ்நாடு அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை ரேஷன் கார்டு (Ration Card) சேவைகளை எளிமைப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்
பொதுமக்கள் அசல் குடும்ப அட்டைகள் தொலைந்துவிட்டால் நகல் குடும்ப அட்டைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அந்த அட்டைகளை அரசு அலுவலங்களுக்கு நேரில் சென்று பெறுவதை மாற்றி, நகல் மின்னணு அட்டைகளை அஞ்சல் வழியாக பயனாளிகளின் வீடுகளுக்கே அனுப்பி வருகிறது தமிழ்நாடு அரசு.
நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று இன்றியமையாப் பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத முதியவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்கள் தங்களுக்கான பிரதிநிதியை நியமனம் செய்து கொள்ளும் வசதியை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கான ஆங்கீகாரச் சான்று பெற வேண்டும். அப்படி பெற்றவர்கள் மேலே குறிப்பிட்டவர்களுக்கு மாற்றாக பொருட்களை நியாய விலைக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்..
நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருட்களின் அளவை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரத்துடன் எடை தராசு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1980 நியாயவிலைக் கடைகளில் இம்முறை செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பயானிகளுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு, எடை உறுதி செய்யப்படுகிறது...
கைவிரல் ரேகை சரிவர பதிவு செய்ய இயலாதவர்கள் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்தமுறை தமிழ்நாட்டு ரேஷன் கடைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது..
ரேஷன் கார்டுகளில் க்யூ ஆர் கோடுகளை தமிழ்நாடு அரசு அச்சிட்டுள்ளது. இந்த துரிதக் குறியீடுகள் (QR Code) விற்பனை முனைய இயந்திரத்தில் ஸ்கேன் செய்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்..
உணவில் சிறுதானியங்களை சேர்த்து ஊட்டச்சத்தை பெருக்கும் வகையில் நியாயவிலைக் கடைகளில் அரசிக்கு பதிலாக கேழ்வரகு விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. அரிசிக்கு மாற்றாக 2 கிலோ கேழ்வரகு கொடுக்கப்படுகிறது..
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் கைவிரல் பதிவு வழியாகவே பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. 99 விழுகாடு பயனாளிகளுக்கு இந்த முறை வழியாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படுகின்றன..
இதுதவிர புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம், பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட சேவைகளிலும் விரைவான சேவை வழங்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்தியாவிலேயே இந்த நடவடிக்கைகளில் முன்னோடி மாநிலமாகவும் மாறியுள்ளது..