ஆகஸ்ட் பணம் வரப்போகுது.. தமிழ்நாடு அரசே வங்கி கணக்கிற்கு அனுப்பும் ரூ.3000.. யாருக்கெல்லாம் வரும்

சென்னையில், தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான உதவித்தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகை, அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக பயனாளிகளின் கணக்குகளில் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், இந்த உதவித்தொகை பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று முக்கிய திட்டங்களின் மூலம், பயனாளர்கள் மாதம் ரூ.3000 வரை தங்கள் வங்கிக் கணக்கில் பெறும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களுக்குள் இந்தத் தொகை விடுவிக்கப்படும். ஆகஸ்ட் மாதத்திற்கான தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. அந்த திட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இங்கே காண்போம்..
அரசுப் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் ஆண் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு, புதுமைப் பெண் திட்டம் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் கல்விக்கு அரசு உதவி புரிகிறது...
புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே, மாணவர்களுக்காக மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்திற்கான அடுத்த தவணை இந்த வாரம் வழங்கப்படும்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவி
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையாக வழங்கப்படும். பயனாளிகள் இளங்கலை படிப்பு படிக்கும் வரை இந்த உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். மாணவிகள் எங்கும் அலைய வேண்டியதில்லை, அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படும். இந்த திட்டத்திற்கு 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது...
அதேபோல், மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதுமைப்பெண் திட்டத்தைப் போலவே மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார். இந்த திட்டத்தின் அடுத்த தவணை இந்த மாதம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
மேலும், மகளிர் உரிமைத்தொகை திட்டம் ஏற்கனவே தமிழ்நாட்டில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகள், முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகள், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள் மற்றும் புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் விரைவில் சேர்க்கப்பட உள்ளனர். சுமார் இரண்டரை லட்சம் பேருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. புதிதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகியோர்களுக்கு பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இந்த மாதம் 15ம் தேதி பணம் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தம் 3000 ரூபாய் இந்த மாதம் வழங்கப்பட உள்ளது...