தூள் கிளப்பும் குற்றாலம் சீசன்.. வல்லம் மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு 30 டன் பழங்கள் வரத்து..!!

குற்றால சீசன் பழங்களுக்கு என தனி மார்க்கெட் உள்ளது. இது செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் பகுதியில் தெற்கு எஸ்டேட் மற்றும் குண்டாறு மலைப்பகுதிகளில் விளையும் சீசன் பழங்களுக்கான மார்க்கெட் ஆகும்.
தென்னகத்தின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் குற்றால சீசன் நேரமாகும். பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினமும் குற்றால அருவியில் குளிப்பதற்கும், அங்கு கிடைக்கும் சீசன் பழங்களை ருசிப்பதற்கும் வருகை புரிகின்றனர்.
குற்றால சீசன் பழங்களுக்கு என தனி மார்க்கெட் உள்ளது. இது செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் பகுதியில் தெற்கு எஸ்டேட் மற்றும் குண்டாறு மலைப்பகுதிகளில் விளையும் சீசன் பழங்களுக்கான மார்க்கெட் ஆகும். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் ரம்புட்டான் மங்குஸ்தான் பழங்களின் சீசன் நேரமாகும். தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட குடோன்கள் உள்ளன. இங்கு மொத்தமாகவும், ஏலம் மூலம் சில்லறையாகவும் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு வல்லம் மார்க்கெட்டில் இருந்து சராசரியாக 30 லிருந்து 40 டன் பழங்கள் வரத்து உள்ளது
கேரளா, குண்டாறு மலை, தெற்கு எஸ்டேட் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட பழங்களை தமிழகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கர்நாடகா, மைசூர், கோவா, மும்பை போன்ற பிற பகுதிகளுக்கும் இங்கு இருந்து தான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன், முட்டை பழம், ஸ்டார் ஃப்ரூட் போன்ற பலவகையான பழங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. செங்கோட்டை பகுதியில் விளையும் மாங்காய், நெல்லிக்காய் இந்தியா முழுவதும் அனுப்பப்படுகிறது
என்னதான் இங்கு பழங்கள் அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டாலும் இதற்கு என தனி மார்க்கெட் அமைக்கப்படவில்லை. தனியார் குடோன்களாக வைத்திருப்பதன் மூலம் சீசன் நேரங்களில் வாகன நெருக்கடி அதிகமாக உள்ளது. எனவே வல்லம் பழ மார்க்கெட் என தனியாக தொடங்க வேண்டும். மாங்காய் சீசனின் போது மாங்காய் விலை மிகவும் குறைவாக அவ்வப்போது விற்பனை செய்யப்படுகிறது. அப்பொழுது அதனை சேமித்து வைத்து ஜூஸ் தயார் செய்வதற்கு தனியாக குளிர்சாதன அறைகள் வேண்டும் என்பது இந்தப் பகுதி வியாபாரிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.