கட்டிட தொழிலாளியான விஜய் டிவி சீரியல் நடிகை.. எதிர்நீச்சல் ஆதிரையின் எதிர்பாராத மாற்றம்! நெகிழ வைத்த வீடியோ

கட்டிட தொழிலாளியான விஜய் டிவி சீரியல் நடிகை.. எதிர்நீச்சல் ஆதிரையின் எதிர்பாராத மாற்றம்! நெகிழ வைத்த வீடியோ
கட்டிட தொழிலாளியான விஜய் டிவி சீரியல் நடிகை..

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த பிரபலம் அடைந்த நடிகை சத்யா தேவராஜன் தற்போது கட்டட வேலை செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்ததும் என்னாச்சு இவர் எப்படி மாறிவிட்டாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த வீடியோவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதை பற்றி சத்யா தேவராஜன் பகிர்ந்து இருக்கும் நிலையில் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

பொதுவாக சீரியலாக இருந்தாலும் சரி சினிமாவாக இருந்தாலும் சரி அதில் நடிக்கும் நடிகைகள் மற்றும் நடிகர்களை அந்த கேரக்டராகவே ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அது போல தான் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்த நடிகை சத்யா தேவராஜனை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். ஆரம்பத்தில் அண்ணிமார்களை கொடுமைப்படுத்தும் ஆதிரை பிறகு அண்ணிமார்களின் தயவால் தான் பல தைரிய மன முடிவெடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவர் அண்ணன் பக்கம் சாய்ந்து விட்டது ரசிகர்களை வருத்தம் அடைய செய்ய வைத்தது

ஆனாலும் இந்த சீரியலில் சத்யா தேவராஜன் தடுத்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு விஜய் டிவியில் தனம் சீரியலில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் ஆட்டோ ஓட்டும் கதாநாயகனை காதலித்து குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் சில மாதங்களில் கதாநாயகன் இறந்து விடுகிறார். அதற்கு பிறகு கதாநாயகனின் குடும்பத்தை தனம் தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்