ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுகேட்புக் கருவி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

ராமதாஸ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுகேட்புக் கருவி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு
காவல்துறையில் ஒப்படைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி

விழுப்புரம்: திண்​டிவனம் அடுத்த தைலாபுரத்​தில் உள்ள தனது வீட்​டில், நாற்​காலி​யில் ஓட்​டு​கேட்​புக் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக ராம​தாஸ் தெரி​வித்​ திருந்​தார். கட்​சித் தலை​வர்கள் மற்​றும் பாமக நிர்வாகி​களை சந்​தித்து அவர் ஆலோசனை நடத்தும் இடத்​தில் பொருத்​தப்​பட்​டிருந்த ஒட்​டு​ கேட்​புக் கருவி கடந்த 9-ம் தேதி கண்​டு​பிடிக்​கப்பட்​டது.

இதுகுறித்து கிளியனூர் காவல் நிலை​யம் மற்​றும் விழுப்​புரம் சைபர் க்ரைம் போலீ​ஸில் கடந்த 15-ம் தேதி பாமக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்​பாக கிளியனூர் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​தனர். இந்​நிலை​யில், கிளியனூர் காவல் நிலைய ஆய்வாளர் கலை​யரசி​யிடம் ஒட்​டு​கேட்​புக் கரு​வியை தலைமை நிலை​யச் செய​லா​ளர் அன்​பழகன் நேற்று ஒப்​படைத்​தார்.

இதுகுறித்து போலீஸார் கூறும்​போது, “ஒரு பேட்​டரி, ஒரு சிம் கார்​டு, ஒரு மென்​பொருள் அடங்​கிய பலகை மட்​டும் ஒப்​படைத்துள்ளனர். தனித்​தனி​யாக பிரித்து கொடுத்​துள்​ளனர். ஒட்​டு​ கேட்​புக் கரு​வியை முழு​மை​யாக ஒப்​படைக்​கப்​பட​வில்​லை” என்றனர்