இன்றைய இலக்கியம்

இன்றைய இலக்கியம்
சமண முனிவர்கள்

அறத்துப்பால்

துறவறவியல்

தீவினை அச்சம் அதிகாரம்

 

பாடல் எண்: 124

"நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாரும் கோடிக்

கடுவினைய ராகியார்ச் சார்ந்து".

     

                                    -சமண முனிவர்கள். 

பொருளுரை:

               உடம்புக்கு நன்மை செய்யும் நெய்யும் நெருப்பிலிட்டுக் காய்ச்சப்பட்டால், உடம்பில் பட்டுச் சுட்டுத் துன்பம் தரும் நோயை உண்டாக்கும். அதுபோல, நெறி தவறாத நல்லோரும் தீவினையாளரைச் சார்ந்தால் நெறிகெட்டுக் கொடுந்தொழில் செய்பவர் ஆவர். (சிற்றினம் சேர அஞ்சுதல் வேண்டும் என்பது கருத்து).