2 மடங்கு உயர்ந்த விசா கட்டணம்! இனி இந்தியர்கள் அமெரிக்கா செல்வதே கஷ்டம்? டிரம்ப் உத்தரவால் அதிருப்தி

வாஷிங்டன்: டிரம்ப் அமெரிக்க அதிபராக வந்த பிறகு அவர் அந்நாட்டில் நுழையப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறார். சட்டங்களைக் கடுமையாக்கி வருகிறார். அவர் சமீபத்தில் கொண்டு வந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் சட்டத்தின் கீழ் மற்றொரு கட்டணத்தை நாம் கூடுதலாகச் செலுத்த வேண்டி இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டிரம்ப் காலத்தில் அமெரிக்காவுக்குச் சட்டப்பூர்வமாகச் செல்வதே கடினமாக மாறியுள்ளது. அதிபர் டிரம்ப்பின் ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் சட்டத்தின் கீழ் மற்றொரு சிக்கல் வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ் விசா நேர்மை கட்டணம் எனச் சொல்லி தனியாக $250 டாலர் வசூலிக்கவுள்ளனராம். இந்தத் தொகை பணவீக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கத்தைப் பொறுத்து இந்தத் தொகை அதிகரிக்கும்.
மேலும், இது செக்யூரிட்டி டெபாசிட் போன்றதுதான். விண்ணப்பதாரர்கள் சில குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால், இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படுமாம். அமெரிக்கக் குடிவரவுச் சட்டங்களை விண்ணப்பதாரர்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே டிரம்ப் இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
இந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிபர் டிரம்ப் ஜூலை 4ம் தேதி ஒப்புதல் அளித்த பிறகு அது சட்டமாக அமலானது. மேலும், இந்த புதிய விசா விதிமுறையானது, ஒருங்கிணைந்த சட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய விதிமுறையின்படி, இந்தக் கட்டணம் 2026 முதல் நடைமுறைக்கு வரும். தூதரக விசா பிரிவுகளுக்கு (A மற்றும் G) மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா / வணிகம் (B-1/B-2), மாணவர் (F/M), வேலை (H-1B) மற்றும் பரிமாற்ற (J) விசாக்கள் என எல்லா வகையான விசாக்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே உள்ள விசா விண்ணப்பக் கட்டணங்களுடன் சேர்ந்து, விசா வழங்கப்படும் நேரத்தில் இந்தக் கூடுதல் கட்டணத்தையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வசூலிக்கும்.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த குடிவரவு சேவை அமைப்பான ஃபிராகோமென் வெளியிட்ட அறிக்கையில், "விசா விலக்கு திட்டப் பயணிகளுக்கான $13 எலக்ட்ரானிக் சிஸ்டம் ஃபார் டிராவல் அங்கீகாரம் (ESTA) கட்டணம் வசூலிக்கப்படும். 10 ஆண்டு B-1/B-2 விசாக்களை வைத்திருப்போருக்கு $30 எலக்ட்ரானிக் விசா அப்டேட் சிஸ்டம் கட்டணம் என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தொகை வசூலிக்கப்படும்" என்றார்.
இரண்டு மடங்கு அதிகரிப்பு
இந்தியர்களுக்கான அமெரிக்கச் சுற்றுலா / வணிக விசாவுக்கு (B-1/B-2) சுமார் $185 (ரூ. 15,855) செலவாகும். இது புதிய கூடுதல் கட்டணங்களான விசா நேர்மை கட்டணம் $250, I-94 கட்டணம் $24 மற்றும் ESTA கட்டணம் $13 ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதனால் அமெரிக்கா சுற்றுலா செல்ல விசாவுக்கு கூடுதலாகச் சுமார் $472 (ரூ. 40,456) செலவாகும்.
செக்யூரிட்டி டெபாசிட் மாதிரி

இந்தியர்களுக்கான அமெரிக்கச் சுற்றுலா / வணிக விசாவுக்கு (B-1/B-2) சுமார் $185 (ரூ. 15,855) செலவாகும். இது புதிய கூடுதல் கட்டணங்களான விசா நேர்மை கட்டணம் $250, I-94 கட்டணம் $24 மற்றும் ESTA கட்டணம் $13 ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதனால் அமெரிக்கா சுற்றுலா செல்ல விசாவுக்கு
இந்த ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்லுக்கு அதிபர் டிரம்ப் ஜூலை 4ம் தேதி ஒப்புதல் அளித்த பிறகு அது சட்டமாக அமலானது. மேலும், இந்த புதிய விசா விதிமுறையானது, ஒருங்கிணைந்த சட்டத்தின் ஒரு பகுதியாகும். புதிய விதிமுறையின்படி, இந்தக் கட்டணம் 2026 முதல் நடைமுறைக்கு வரும். தூதரக விசா பிரிவுகளுக்கு (A மற்றும் G) மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு பொருந்தும்
சுற்றுலா / வணிகம் (B-1/B-2), மாணவர் (F/M), வேலை (H-1B) மற்றும் பரிமாற்ற (J) விசாக்கள் என எல்லா வகையான விசாக்களுக்கும் இது பொருந்தும். ஏற்கனவே உள்ள விசா விண்ணப்பக் கட்டணங்களுடன் சேர்ந்து, விசா வழங்கப்படும் நேரத்தில் இந்தக் கூடுதல் கட்டணத்தையும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வசூலிக்கும்.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த குடிவரவு சேவை அமைப்பான ஃபிராகோமென் வெளியிட்ட அறிக்கையில், "விசா விலக்கு திட்டப் பயணிகளுக்கான $13 எலக்ட்ரானிக் சிஸ்டம் ஃபார் டிராவல் அங்கீகாரம் (ESTA) கட்டணம் வசூலிக்கப்படும். 10 ஆண்டு B-1/B-2 விசாக்களை வைத்திருப்போருக்கு $30 எலக்ட்ரானிக் விசா அப்டேட் சிஸ்டம் கட்டணம் என ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு தொகை வசூலிக்கப்படும்" என்றார்.
இரண்டு மடங்கு அதிகரிப்பு
இந்தியர்களுக்கான அமெரிக்கச் சுற்றுலா / வணிக விசாவுக்கு (B-1/B-2) சுமார் $185 (ரூ. 15,855) செலவாகும். இது புதிய கூடுதல் கட்டணங்களான விசா நேர்மை கட்டணம் $250, I-94 கட்டணம் $24 மற்றும் ESTA கட்டணம் $13 ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இதனால் அமெரிக்கா சுற்றுலா செல்ல விசாவுக்கு கூடுதலாகச் சுமார் $472 (ரூ. 40,456) செலவாகும்.
இது முன்பு இருந்த செலவை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மேலும், வரும் காலங்களில் இந்த கட்டணத்தை மேலும் உயர்த்தவும் அந்நாட்டு அரசுக்கு அதிகாரம் உள்ளது. அங்குப் பணவீக்கத்தைக் கணக்கிட உதவும் நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையில் 2026 முதல் இந்தத் தொகை ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படும்.
இந்த செக்யூரிட்டி டெபாசிட்டை திரும்பப் பெறலாம் என்றே அந்நாட்டு அரசு சொல்கிறது. ஆனால் அதற்கான நிபந்தனைகள் மிகக் கடுமையாக உள்ளன. விசா வைத்திருப்பவர்கள், விசா காலாவதியான ஐந்து நாட்களுக்குள் நீட்டிப்பு அல்லது வேறு விசா கோரி விண்ணப்பிக்காமல் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டால் அல்லது விசா காலாவதி தேதிக்கு முன்பு நிரந்தரக் குடியுரிமைக்கு வெற்றிகரமாக மாற்றினால் பணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம்.
விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால், அந்தக் கட்டணம் அமெரிக்கக் கருவூலத்திற்குச் சென்றுவிடும். அதேநேரம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளில் இன்னுமே தெளிவற்ற சூழலே இருக்கிறது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விரைவில் தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.