நெப்போலியன் மருமகளுக்கு என்ன ஆச்சு? சோகமாக இருக்கும் மூத்த மகன்! நேரில் சென்ற மாதம்பட்டி ரங்கராஜன்

சென்னை: நடிகர் நெப்போலியன் மூத்த மகன் தனுஷுக்கு கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு பல சர்ச்சைகளும் வதந்திகளும் பரவி வந்தது. ஆனாலும் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் இப்போது தனுஷ் ஆசைப்பட்டதால் நடிகரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜன் நேரில் சென்று இருக்கிறார். அப்போது தனுஷ் மனைவி அக்ஷயா அந்த வீடியோவில் காணவில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் நெப்போலியன் 80ஸ் காலகட்டத்தில் சினிமாவில் இருந்தாலும் 90ஸ் காலகட்டத்திலும் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார். ஆரம்பத்தில் வில்லனாக சினிமாவில் நடிக்க தொடங்கிய நெப்போலியனுக்கு எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. சின்ன வயதிலேயே அதிக வயது வில்லனாக அதிகமான படங்களில் நடித்த நடிகர் நெப்போலியனாக தான் இருக்கும்.
இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே 60 வயதான கேரக்டரில் தான் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு 24 வயது தானாம். நடிக்க வேண்டும் என்று காத்திருந்த நெப்போலியன் என்ன கேரக்டர் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். நடிகராக மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார்.
இது ஒரு பக்கம் இருக்க நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தன்னுடைய மகனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று பல முயற்சிகள் எடுத்திருந்தார், ஆனால் 10 வயதுக்கு மேலே தனுஷால் எழுந்து நடக்க முடியாமல் போயிருக்கிறது.
ஆனாலும் தனுஷ் தன்னுடைய விடாமுயற்சியால் வீச்சேரியில் இருந்தபடியே ஆன்லைன் மற்றும் கம்ப்யூட்டர் சம்பந்தமாக பல படிப்புகளையும் படித்திருக்கிறார். 24 ஆவது வயதில் கடந்த வருடத்தில்தான் தனுஷுக்கு அக்ஷயா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அந்த நேரத்தில் இந்த திருமண செய்தி பெரிதாக விவாதிக்கப்பட்டது. தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட மகனுக்கு திருமணம் செய்து வைத்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுக்கிறார் என்று பலரும் விமர்சித்து வந்தனர். ஆனாலும் மணப்பெண் அக்ஷயா மற்றும் அவருடைய குடும்பத்தினர் நாங்கள் விருப்பப்பட்டது தான் திருமணத்தை செய்து கொள்கிறோம் என்று கூறியிருந்தனர்.
அது போல ஜப்பானில் திருமணம் நடந்த பிறகு அங்கு சில மாதங்களாக சுற்றுப்பயணம் செய்து விட்டு அதற்குப் பிறகு கடல் வழி மற்றும் ரயில் பயணம் மூலமாக ஜப்பானிலிருந்து அமெரிக்கா வருவதற்காக நெப்போலியன் குடும்பத்தினர் ப்ளான் போட்டு இருந்தனர் . அதுபோல தாங்கள் செல்லும் இடமெல்லாம் எடுக்கும் வீடியோக்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் நெப்போலியன் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் நடந்த ஒரு திருமண பங்க்ஷனில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் கலந்து கொண்டிருக்கிறார். நடிகராகவும் சமையல் கலைஞராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் மாதம்பட்டி ரங்கராஜனை நெப்போலியன் மகன் தனுசுக்கு ரொம்பவும் பிடிக்குமாம் அதனால் நெப்போலியன் மாதம்பட்டி ரங்கராஜனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருக்கிறார்
.
மாதம்பட்டி ரங்கராஜன் தனுஷுடன் சிறிது நேரம் கலகலப்பாக பேசியிருக்கிறார். உங்களுடைய என்கேஜ்மென்ட்க்கு நான்தான் சமைத்து இருந்தேன் என்றும் கூறியிருந்தார். அந்த சாப்பாட நீங்க சாப்பிட்டு பாத்தீங்களா என்று சொல் கேட்க, தனுஷ் நான் சாப்பிட்டேன் நல்லா இருந்துச்சு என்று சொல்லி இருந்தார். அதுபோல பரிதாபங்கள் youtube சேனல் மூலம் பிரபலம் அடைந்த கோபி மற்றும் சுதாகரும் அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்களையும் நெப்போலியன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்திருந்தார்.
கோபி மற்றும் சுதாகரும் தங்களுடைய நக்கல் கலந்த காமெடி செய்து தனுஷை மகிழ்வித்து இருந்தனர். ஆனாலும் தனுஷ் முகம் வாட்டமாக இருந்தது அதோடு அந்த வீடியோக்களில் தனுஷ் உடைய மனைவி அக்ஷயாவை காணவில்லை இதனால் அக்ஷயா எங்கே போனார்? என்று பலரும் கமெண்ட்களில் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். ஜப்பானிலிருந்து கடந்த சில மாதங்களாக பயணம் செய்து அமெரிக்காவிற்கு வந்ததால் அக்ஷயாவிற்கு உடல்நிலை எதுவும் சரியில்லையா? அல்லது அவர் தன்னுடைய சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டிக்கு வந்திருக்கிறாரா என்றும் கேள்விகள் குவிகிறது.
அதேபோல நெப்போலியன் தன்னுடைய மகன் கோபி மற்றும் சுதாகரிடம் பேசும் போது சிரிப்பதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார். ஒரு தந்தையாக தன்னுடைய மகனின் சந்தோஷத்தை பார்த்து அவர் மகிழ்வதை பலரும் பாராட்டி வருகிறார்கள். நெப்போலியன் தன்னுடைய மகனைப் போல தசை சிதைவு நோயால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக திருநெல்வேலி மயோபதி என்ற ஒரு மருத்துவமனையை நடத்திக் கொண்டிருக்கிறார். அங்கு இலவசமாக சிகிச்சை பெறுவதற்காக பல நாடுகளில் இருந்தும் அங்கு குழந்தைகள் வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.