கவலையில் வீழ்த்தும் கடன் செயலிகள்..

கவலையில் வீழ்த்தும் கடன் செயலிகள்..
கவலையில் சிக்கவைக்கும் கடன் செயலிகளைப் பற்றி..

நமது தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவு செய்து கொள்வதற்கு நமக்கு அன்றாடம் பணம் தேவைப்படுகிறது. இந்தப் பணம் நாம் செய்யும் பணி, தொழில் ஆகியவற்றின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. குழந்தைகளின் திருமணம், கல்வி, வீடு கட்டுதல், புதிய தொழில் தொடங்குதல், மருத்துவச் சிகிச்சை போன்றவற்றுக்கு நமக்கு நிதி அதிகமாகத் தேவைப்படுகிறது. அவ்வாறான நேரங்களில் தேவைப்படும் நிதியைக் கடனாக வாங்குவது நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், சில நேரங்களில் அவற்றைக் குறித்த நேரத்தில் நம்மால் திரும்பச் செலுத்த முடிவதில்லை. இவ்வாறான கடன் தொல்லையால் நாடு முழுவதும் பல தனிநபர்களும், குடும்பங்களும் தற்கொலையில் ஈடுபடுவதை அன்றாடம் ஊடகங்களின் மூலம் நாம் அறிகிறோம்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுய உதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் போன்றோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் பொதுவாக ஈர்க்கப்பட்டு, தமது தேவைக்காக அவர்களிடமிருந்து கடனைப் பெறுகின்றனர்.

அண்மையில் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ள தமிழ்நாடு அரசின் "கடன் வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (2025)' கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. கடன் பெறுபவர்களிடமிருந்து கொடுத்தக் கடனை வசூல் செய்யும்போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு வரை அவர்களுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்பையும் இந்த புதிய சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடன் வழங்குவோர், அடகுக் கடைகள் போன்றவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் (1943), தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் (1957), தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் (2003) ஆகியவற்றையும் மாநில அரசு ஏற்கெனவே அமல்படுத்தியுள்ளது.

கடனை திரும்பச் செலுத்த முடியாத நிலையில், கடன் வழங்கும் நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களைப் பாதுகாப்பதற்கு இந்த மாதிரியான சட்டங்கள் உதவும். இந்த புதிய சட்டம் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் பொருந்தும். கடன் பெற்ற நபரிடம் மேற்கொள்ளப்படும் கடன் வசூலிப்பு நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகி, கடன் பெற்றவர் தற்கொலை செய்துகொண்டதாக நிரூபிக்கப்பட்டால் சட்டம் 108-இன் பேரில் அது குற்றமாகக் கருதப்படும்...

தரப்படுவதாலேயே அதற்கு நாம் இரையாகிறோம். கடன் வாங்கும் போது, அது நமக்குத் தேவைதானா? அது இல்லாமல் நம்மால் வாழ முடியுமா? என்று சிந்தித்துப் பார்த்து வாங்க வேண்டும்; அதைத் திருப்பித் தரும் திறன் இருந்தால் மட்டுமே நாம் கடனில் அவற்றைப் பெறலாம்.

குறைந்தபட்ச தேவைகளை நமது வாழ்வியல் முறையாக மாற்றிக் கொள்ள வேண்டும். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்துவிட்டு பிறகு இருக்கும் பணத்தில் சிக்கனமாக வாழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

கூடுமானவரை அரசின் நலத் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டாலே கணிசமான அளவு பணத்தை நம்மால் ஒவ்வொரு மாதமும் சேமிக்க முடியும். எளிதில் கிடைப்பதாலேயே அதிக வட்டிக்குத் தேவையின்றி பணத்தைக் கடன் வாங்குவது, உறவினர்களிடம் பணம் வாங்குவது, நமது பொருளாதார வல்லமையை மீறி பணத்தைக் கடனாக வாங்குவது போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். மனித வாழ்க்கையில் பல நேரங்களில் நமது நிம்மதியைக் கெடுப்பது நமது கடனே ஆகும்.

இனியாவது நம்மைக் கவலையில் வீழ்த்தும் கடன் அட்டைகள், கடன் செயலிகள்ஆகியவற்றின் பயன்பாட்டிலிருந்து விலகி வாழ்வோம்.