காலை வாரிய சீனா.. சிக்கலில் தவிக்கும் இந்தியா! உதவிக்கு வந்த சவூதி அரேபியா! மேட்டர் இதுதான்...

டெல்லி: நம் நாட்டை சீண்டி வருவதை சீனா வாடிக்கையாக வைத்துள்ளது. தற்போது சீனா எடுத்துள்ள ஒரு முடிவால் நம் நாடு பெரியளவில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இப்படி சீனா நம் முதுகில் குத்திய நிலையில் சவூதி அரேபியா, மொராக்கோ உள்ளிட்ட நாடுகள் நம் நாட்டுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. இதுபற்றிய விவரம் வருமாறு...
பாகிஸ்தானை போல் நம் இன்னொரு அண்டை நாடான சீனாவும் நம்மை பகைத்து வருகிறது. நம் நாட்டுக்கு எதிரான சதிவேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தற்போது கூட நம் நாட்டின் எல்லை அருகே சீனா ரூ.14.6 லட்சம் கோடி மதிப்பீட்டில் பெரிய அணையை கட்ட தொடங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது....
இப்படி நேரடியாகவும், மறைமுகமாகவும் நம் நாடு சீனாவை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டின் விவசாயத்தை பாதிக்கும் நோக்கத்தில் சீனா முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது நம் நாட்டுக்கான உர ஏற்றுமதியை சீனா நிறுத்தி உள்ளது.
நம் நாட்டை எடுத்து கொண்டால் எப்போதும் ஜூலை மாதம் இறுதியில் ராஃபி பருவ விவசாயம் தொடங்கும். இதற்கு டிஏபி எனும் (டை அம்மோனியம் பாஸ்பேட்) என்ற உரம் முக்கியம். ராஃபி பருவத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் இருந்து 22 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் கூடுதலாக டிஏபி உரம் இறக்குமதி செய்யப்படும்..
ஆனால் இப்போது சீனா அந்த உர ஏற்றுமதியை நிறுத்தி உள்ளது. நம் நாட்டைஎடுத்து கொண்டால் டிஏபி உரத்தை பொறுத்தவரை சீனாவிடம் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யபப்டுகிறது. 2023ம் ஆண்டு முதல் சீனா நமக்கு உரம் தருவதை படிப்படியாக குறைத்து வருகிறது. தற்போது மொத்தமாக நிறுத்தி உள்ளது...
இதனால் ராஃபி பருவ விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நம் நாடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளிடம் இருந்து டிஏபி உரம் இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியது. அதன்படி சவூதி அரேபியா மற்றும் மொராக்கோ நாடுகள் டிஏபி உரத்தை நமக்கு தர முன்வந்துள்ளன.
இருநாடுகளுடன் உர இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இருநாடுகளிடம் இருந்து நமக்கு 31 லட்சம் மெட்ரிக் டன்களுக்கு மேல் டிஏபி உரம் கிடைக்க உள்ளது. இதுதவிர ரஷ்யாவிடம் இருந்து உரம் இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையும் தொடர்கிறது...
மேலும் எகிப்து, நைஜீரியா, டோகோ, மவுரித்தேனியா மற்றும் துனிசியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து உரத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் போய் கொண்டுள்ளது. சீனாவுக்கு பதில் வேறு நாடுகளிடம் இருந்து உரம் வாங்குவதல் நமக்கு கூடுதல் செலவு ஏற்படும். இருப்பினும் உர தேவையை பூர்த்தி செய்ய நம் நாட்டுக்கு வேறு வழியில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது...