பேட்டரி திருட்டு கும்பல் அட்டகாசம்: கோவையில் பொதுமக்கள் அச்சம்

கோவை கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதிகளிலும், சௌக்கார் நகர் பகுதிகளிலும் விட்டிற்கு வெளியே நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்மநபர்கள் பேட்டரிகளைத் திருடி வரும் சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது
தொழில் நகரமான கோவையில் அண்மைக்காலமாக பேட்டரி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையேயும், வணிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கரும்புக்கடை சுற்றுவட்டார பகுதி, சௌகார் நகர் பகுதிகளில் விட்டிற்கு வெளியே சாலையோரங்களில் நிறுத்திவைக்கப்படும் வாகனங்களில் இருந்து மர்மநபர்கள் பேட்டரிகளைத் திருடுவதாக புகார் எழுந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 11) அன்று நள்ளிரவில் சௌகார் நகர் பகுதியில் வாகனத்தின் பேட்டரியை மர்மநபர் திருடிச்செல்லும் காட்கள் அந்தப் பகுதியில் பொருத்தி இருக்கும் கண்காப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகளை அப்பகுதி மக்கள் சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளனர். சௌகார் நகர் பகுதிகளில் போலீசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, பேட்டரி திருடும் மர்ம நபர்களை கண்காணித்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கோவை மாநகர காவல் துறையினர் பேட்டரி திருட்டுகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். சந்தேகத்திற்கிடமான நபர்களைக் கண்காணிப்பது, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வது, குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், திருட்டு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, காவல் துறையினருக்கு புதிய சவாலாக உள்ளது