பணம் திருடுமா ஏஐ? சாட்ஜிபிடி-யை உருவாக்கிய நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை

பணம் திருடுமா ஏஐ? சாட்ஜிபிடி-யை உருவாக்கிய நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை
சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்..

 சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

பணம் திருடுமா ஏஐ? சாட்ஜிபிடி-யை உருவாக்கிய நிறுவனத்தின் சிஇஓ எச்சரிக்கை

தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை ஏஐ டெக்னால்ஜி ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என ஏகப்பட்ட துறைகளில் ஏஐ ஆதிக்கம் அதிகரித்தே வருகிறது. ஏஐ வருகையால் மக்களுக்கு மிகப் பெரிய பலன் உள்ளது என்ற வாதம் வைக்கப்பட்டாலும் கூட, முன்பு பல மணி நேரம் எடுத்துச் செய்த வேலைகளைக் கூட இப்போது சில நொடிகளில் செய்து முடித்துவிட முடிகிறது. இந்த ஏஐட டூல்களை பலரும் பல விதமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பல்வேறு துறைகளில் வேலையிழப்பு அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இன்னொரு பக்கம் மனிதனின் சிந்திக்கும் ஆற்றலை ஏஐ மட்டுப்படுத்திவிடும் என்ற அபாயகரமான ஆய்வு முடிவுகளும் சொல்கின்றன. வரும் காலத்தில் தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் ஆற்றலை கூட ஏஐ பெற்றால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்பதுதான் துறைசார் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், சாட்ஜிபிடியின் தாய் நிறுவனமான ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் உறுகையில், "தற்போதைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இது தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளார். வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். இதன் மூலம், அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்ற விஷயங்கள் அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. எனவே, ஏஐ வளர்ச்சியுடன் இணைந்து, அதனைத் தவறாக பயன்படுத்தும் முயற்சிகளையும் கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.