சென்னையில் மேம்படுத்தப்படும் மேலும் ஒரு பேருந்து நிலையம்.. 3 தளங்களுடன் எப்படி ஆகப்போகுது பாருங்க!

சென்னை: சென்னையில் திருவான்மியூர், பிராட்வே பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்படும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்ததாக சென்னை ஆவடி பேருந்து நிலையமும் மேம்படுத்தப்பட இருக்கிறது. தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாவது தளம் என 3 தங்களுடன் அமைய உள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. விமான நிலையம் ரேஞ்சுக்கு ஹைடெக் ஆக இந்த ஆவடி பேருந்து நிலையத்தின் மாதிரி படம் உள்ளது
சென்னையில் பல்வேறு பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை பிராட்வே பேருந்து நிலையம் 566.6 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்த மல்டி மாடல் காம்ப்ளக்ஸ் பேருந்து நிலைய திட்டத்திற்கான மதிப்பீடு 822 கோடி ரூபாய் ஆகும்
பேருந்து நிலையத்தை அடுத்த 24 மாதங்களிலும், வர்த்தக கட்டிடம் மற்றும் குறளகம் கட்டிடத்தை அடுத்த 30 மாதங்களிலும் கட்டி முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. வணிக வளாகங்களுடன் மிக பிரமாண்டம்மாக பிராட்வே பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் மற்றொரு மிக முக்கிய பகுதியாக விளங்க கூடிய ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது
ஆவடி பேருந்து நிலையத்தை பொறுத்த்தவரை சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்வத்சலபுரம் பகுதியில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை நகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதாவது, கோயம்பேடு, திருவான்மியூர், ரெட் ஹில்ஸ், தாம்பரம், திருவள்ளூர், ஆரணி, பூந்தமல்லிஉள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில், பக்தவத்சலபுரம் பகுதியில் 1.93 ஏக்கர் பரப்பளவில் ஆவடி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, கோயம்பேடு, திருவான்மியூர், செங்குன்றம், தாம்பரம், திருவள்ளூர், பெரியபாளையம், ஆரணி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது மட்டும் இன்றி தென் மாவட்டங்களுக்கும் இங்கிருந்து எஸ்.இ.டிசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. செங்கோட்டை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் இந்த பேருந்து நிலையத்தில் தற்போது போதிய வசதிகள் இல்லை. இதனால் இந்த பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர் கோரிக்கைகள் விடுத்து வந்தனர்
இந்த நிலையில்தான், தற்போது ஆவடி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி, 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 3 தளங்களுடன் பேருந்து நிலையம் நவீனமயமாக்கப்படும் எனவும், தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாவது தளங்களுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரை தளத்தில் பயணிகள் காத்திருப்பு இடம், நேர்க்காப்பாளர் அலுவலகம் மற்றும் டிக்கெட் கவுண்டர் ஆகியவை அமைக்கப்பட உள்ளது. டாய்லட் வசதி, கடைகள் என ஹைடெக்காக இந்த பேருந்து நிலையம் அமைய உள்ளது. இதற்கான மாதிரி படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. விமான நிலையம் ரேஞ்சுக்கு ஹைடெக் ஆக இந்த ஆவடி பேருந்து நிலையத்தின் மாதிரி படம் உள்ளது.
அதேபோல சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்க கூடிய திருவான்மியூர் பேருந்து நிலையமும் மேம்படுத்தப்படுகிறது. தற்போதைய பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் ரூ.35.11 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. ஈசிஆர் செல்லும் வழியில் அமைந்து இருக்க கூடிய திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் கிளம்பி செல்கின்றன. இந்த பேருந்து நிலைய மேம்பாட்டு பணிகள் 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.