தமிழகம் தமிழ்நாட்டில் 35 சதவீத மானியத்தில் கடன் பெறுவது எப்படி?

மயிலாடுதுறை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோராக மாற விரும்பும் இளைஞர்களுக்கு, அவர்கள் வாங்கும் கடனில் 35 சதவீத மானியம் அளவிற்கு மானியம் தரப்படுகிறது. உதாரணமாக மொத்த திட்டத்தொகை ஒரு கோடி என்றால், வருக்கு அதிகபட்சமாக 35 லட்சம்வரை மானியம் கிடைக்கும். 1அரசு அதிகபட்சமாக ஒரு கோடியோ 50 லட்சம் வரை மானியம் தருகிறது. அதேபோல் கடனை திருப்பி செலுத்தும் போது 6 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.. இளைஞர்கள் 35 சதவீத மானியத்தில் கடன் பெறுவது எப்படி என மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்...
மயிலாடுதுறை கலெக்டர் ஸ்ரீகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் நோக்கத்தின் அடிப்படையிலும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், அதில் பழங்குடியினர் மற்றும் பட்டியலின தொழில் முனைவோர்களின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...
இத்திட்டத்தின்கீழ் முன்மொழியும் நேரடி வேளாண்மை தவிர்த்த உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த எந்த தொழில் திட்டத்திற்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப்படும்...
அது உணவு பதப்படுத்துதல், ஆயத்த ஆடைகள் தைத்தல், அழகுநிலையம், உடற்பயிற்சிக்கூடம், நகரும் அலகுகள் கொண்ட டிராவல்ஸ், ஆம்புலன்ஸ், ரிக்போரிங், பெட்ரோல் பங்க், ஓட்டல், பிளை ஆஷ் கற்கள் மற்றும் வாடகை பாத்திர கடை உள்ளிட்ட எந்த திட்டமாகவும் இருக்கலாம். இயங்கி கொண்டிருக்கும் தொழில் அலகுகளின் விரிவாக்கம், பல்துறையாக்கம், நவீனமாக்கல், தொழில்நுட்ப மேம்பாட்டு முன்மொழிவுகளுக்கும் இத்திட்டத்தின்கீழ் உதவி வழங்கப்படும்...
மொத்த திட்டத்தொகையில் 35 சதவீதம் மானியம் ஆகும். மானியம் உச்ச வரம்பு ரூ.1 கோடியே 50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கடன் திரும்ப செலுத்தும் காலம் முழுவதும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். மொத்தத் திட்டத்தொகையில் 65 சதவீதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சதவீதம் அரசின் பங்காக முன்முனை மானியம் வழங்கப்படும். எனவே, பயனாளர்களுக்கு தமது பங்காக நிதி செலுத்த வேண்டிய தேவை இருக்காது...
எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ள பழங்குடியினர் மற்றும் பட்டியலின தொழில் முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரிமையான தொழில் அலகுகள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in/aabcs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும், பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 4-ம் தளம், மயிலாடுதுறை என்ற முகவரியில் தொடர்பு கொண்டு மேற்கண்ட திட்டத்தில் பயனடையலாம்" இவ்வாறு மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்..