இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1'

இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1'
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜோசப் கொஸ்ன்க்ஷி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு உலகளவில் வெளியான படம் 'எப் 1' (பார்முலா 1).

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜோசப் கொஸ்ன்க்ஷி இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு உலகளவில் வெளியான படம் 'எப் 1' (பார்முலா 1). இதில் பிராட் பிட், டாம்சன் இத்ரிஸ், கெரி கான்டன், ஜாவீர் பார்டன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருந்தனர். ஆப்பிள் ஸ்டூடியோ தயாரித்த இந்த படத்தை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டனர்.

முழுக்க முழுக்க பார்முலா கார் ரேஸை மையப்படுத்தி வெளியான இத்திரைப்படம், வெளிநாடுகளில் வசூலைக் குவித்தது. பொதுவாகவே இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும். அந்தவகையில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்தவாரம் வரை இந்த படத்திற்கு இந்தியாவில் மட்டும் 80 கோடி வசூல் கிடைத்த நிலையில் இப்போது ரூ. 100 கோடி வசூலை கடந்துள்ளது. இந்த தகவலை வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளனர்...