25 ஆண்டு பழைய ஸ்பிளெண்டரில் வந்த தந்தை, மகன்... 13 லட்ச ரூபாய் பைக்கை இலவசமாக வழங்கிய ஹீரோ.. ஏன் தெரியுமா

Splendor Bike | ஹீரோ நிறுவனம் சமீபத்தில் ஒரு ஸ்பிளெண்டர் பைக் பயனருக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய பைக்கை இலவசமாக பரிசாக வழங்கியுள்ளது. ஏன் தெரியுமா?
ஹீரோ ஸ்பிளெண்டர் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஆகும். பல ஆண்டுகளாக ஹீரோ ஸ்பிளெண்டர் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. மிகவும் மலிவான, அதேநேரம் சிறந்த மைலேஜ் கொண்ட ஸ்பிளெண்டர் பைக், எந்த வகையான நிலப்பரப்பிலும் பயன்படுத்த முடியும். இதன் பராமரிப்பு செலவும் குறைவு தான். இந்நிலையில், ஹீரோ நிறுவனம் சமீபத்தில் ஒரு ஸ்பிளெண்டர் பைக் பயனருக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய பைக்கை இலவசமாக பரிசாக வழங்கியுள்ளது. ஏன் தெரியுமா?
பல ஆண்டுகள் பழமையான ஸ்பிளெண்டர் பைக்கில் வந்த தந்தை, மகன் திரும்பிச் செல்லும்போது 13 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புத்தம் புதிய பைக்கை அதுவும் லிமிடெட் எடிசன் பைக்கை இலவசமாக பெற்றுச் சென்றனர். இவர்கள் சமீபத்தில் செய்த செயல் காரணமாக ஹீரோ நிறுவனம் அவர்களுக்கு இந்த பைக்கை இலவசமாக கொடுத்தது..
மங்களூருவை சேர்ந்த பிரஜ்வால் என்ற இளைஞர் தனது தந்தையுடன் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் லடாக் பயணம் செய்து திரும்பியிருந்தார். அவர்களின் பயணம் சோஷியல் மீடியாக்களில் கவனம் ஈர்த்தது. அந்த பயணத்தால் ஈர்க்கப்பட்ட ஹீரோ நிறுவனம் அந்த தந்தை மகனை கௌரவிக்க விரும்பியது. ஏனென்றால், ஸ்பிளெண்டர் ஒரு சிறிய பயணிகள் ரக பைக். அதுவும் அவர்கள் வைத்திருப்பது 25 ஆண்டுகள் பழமையான ஸ்பிளெண்டர் பைக். அதில் மங்களூருவில் இருந்து லடாக் வரை தந்தையும் மகனும் பயணம் செய்தது பேசுபொருளானது. இதையடுத்து அவர்களை கௌரவிக்க ஹீரோ நிறுவனம் முன்வந்தது....
ஹீரோ நிறுவன அழைப்பின் பேரில் ஷோ ரூமுக்கு தாங்கள் லடாக்கிற்கு பயணம் செய்த ஸ்பிளெண்டர் பைக்கில் வந்திருந்தனர். அவர்களுக்கு ரூ.13 லட்சம் மதிப்புள்ள ஹீரோவின் சென்டனியல் எடிஷன் பைக்கை பரிசளிக்க முடிவு செய்தது. அதன்படி, ஆவண வேலைகள் முடிந்தபின் ரிப்பன் கட் செய்ய வைத்து சென்டனியல் எடிஷன் பைக்கை தந்தைக்கும், மகனுக்கும் பரிசளித்தனர் ஷோரூம் ஊழியர்கள். சென்டனியல் எடிஷன் என்பது ஹீரோ நிறுவனத்தின் ஸ்பெஷல் எடிசன் பைக் ஆகும். மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய ரகங்களில் ஒன்று இந்த எடிசன்..
கரிஷ்மா எக்ஸ்எம்ஆரை அடிப்படையாகக் கொண்ட இந்த பைக் இந்தியாவில் 100 யூனிட்கள் மட்டுமே கிடைக்கின்றன. இவற்றில் 75 யூனிட்களை ஏலம் விட்டு ஹீரோ நிறுவனம் ரூ.8.6 கோடி சம்பாதித்தது குறிப்பிடத்தக்கது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனர் பிரிஜ்மோகன் லால் முன்ஜாலின் 101வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் தயாரிக்கப்பட்டது. 210 சிசி எஞ்சின், கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள், அக்ரபோவிக் எக்ஸாஸ்ட், அலுமினிய ஸ்விங் ஆர்ம் போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. இதற்கிடையே, ஹீரோவிடமிருந்து 13 லட்சம் மதிப்புள்ள பைக்கைப் பெற்ற உலகின் முதல் நபர்கள் இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது..