தைராய்டு பிரச்னை இருக்கா ? இந்த காய்கறிகளை தொட்டு கூட பாத்துடாதீங்க

பேரீட்சை, அத்திப்பழம், கொண்டைக்கடலை, கருவேப்பிலை, முருங்கை கீரை, கரிசலாங்கண்ணி கீரை ஆகியவற்றில் இரும்புச்சத்தானது நிறைந்துள்ளது. மத்திசாளை, சூரை, கானாங்கெளுத்தி, சால்மன், முட்டை, மஞ்சள் கரு, பிஸ்தா, சிப்பி, பால் போன்ற பொருட்கள் வைட்டமின் டி ஊட்டத்து உள்ளது.மீன், நண்டு, இறால், கணவாய், முட்டை,
போன்ற இறைச்சி வகைகளிலும், உப்பு, க்ரான் பெரி, ஸ்ட்ராபெரி, அன்னாச்சிப்பழம் போன்றவற்றில் அயோடின் சத்துக்கள் நிறைந்துள்ளனமீன், பாதாம் பருப்பு, முட்டை, பூசணி விதை, ப்ரேசில் நட், பால் இவைகளில் செனிலியம் அதிகமாக காணப்படுகின்றன. பாதாம், வாழைப்பழம், மீன், உருளைக்கிழங்கு, கருப்பு சாக்லெட், ரொட்டி, முந்திரி பருப்பு, வேர்க்கடலை, பூசணி விதை தைராய்டு சுரப்பி டி4 ஹார்மோன் சுரக்க தேவையான மெக்னீசியம் உள்ளது.
தயிர், பீன்ஸ், சோயாபீன்ஸ், முந்திரி பருப்பு, கொய்யா, பெர்ரி பழம், முந்திரி பருப்பு, கடல் சிப்பி போன்றவற்றில் துத்தநாகம் அதிகமாக உள்ளது.காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி போன்ற காய்கறிகள் தைராய்டு இருப்பவர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் தைராய்டு வலுவடைந்து அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தைராய்டு பிரச்சனை உடையவர்கள் அதன் தன்மைக்கு ஏற்ப மருத்துவரின் அறிவுரையின் படி உணவு பழக்கங்களை மாற்றிக்கொள்வது நன்மை பயக்கும் என்பதில் மாற்றுக கருத்து இல்லை