மகாராஷ்டிரா: "உழவு மாடு வாங்க பணமில்லை..." - மனைவியின் துணையோடு கலப்பையால் தானே உழுத விவசாயி

நாட்டிலேயே வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் மகாராஷ்டிராவில்தான் அதிகப்படியான விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.
தற்கொலையைத் தடுக்க மாநில அரசு பல முறை விவசாய கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறது. அப்படி இருந்தும் தற்கொலை சம்பவங்கள் குறையவில்லை.
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(73). இவருக்குச் சொந்தமாக 2.3 ஏக்கர் நிலம் இருக்கிறது.
வயதான காலத்திலும் மனம் தளராமல் தனது மனைவியின் துணையோடு அந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அவரது மகன் புனேயில் வேலை செய்து வருகிறார். மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் அம்பாதாஸுடன் வசித்து வருகின்றனர்.
அவர்களது படிப்பு செலவை அம்பாதாஸ்தான் கவனித்துக்கொள்கிறார். விவசாயத்தில் போதிய வருமானம் வராத காரணத்தால் வெளியில் கடன் வாங்கி படிப்புக்குச் செலவு செய்து வருகிறார்.