திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானத்தை சரி செய்ய பொறியாளர்கள் வருகை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானத்தை சரி செய்ய பிரிட்டிஷ் விமான பொறியாளர்கள் திருவனந்தபுரம் வந்துள்ளனர்.

இந்திய கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபவதற்காக பிரிட்டிஷ் கடற்படையின் எச்எம்எஸ் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த மாதம் வந்தது. இதில் இருந்து புறப்பட்ட எப்-35 ரக போர் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி அவசரமாக தரையிறங்கியது. இதை பழுது பார்க்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.

இதனால் பிரிட்​டிஷ் விமான பொறி​யாளர்​கள் குழு, ராயல் விமானப்​படை​யின் ஏர்​பஸ் ரக சரக்கு விமானத்​தில் எப்​-35 விமானத்தை பழுது பார்ப்​ப​தற்கு உபகரணங்​களு​டன் நேற்று திரு​வனந்​த​புரம் வந்​தடைந்​தனர். ரூ.924 கோடி மதிப்​பிலான இந்த விமானம், பழுது​பார்க்​கும் மையத்​துக்கு எடுத்​துச் செல்​லப்​பட்டு அதை சரிசெய்​யும் பணி​யில் பிரிட்​டிஷ் பொறி​யாளர்​கள் ஈடு​பட​வுள்​ளனர். இவர்​களுக்கு அனைத்து வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ள​தாக பிரிட்​டிஷ் தூதரகம்​ தெரி​வித்​துள்​ளது.