காஸ்ட்லி சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜ்! செலிபிரிட்டி என்றாலும் சட்டம் ஏற்குமா? ரூ.1200 கோடி சொத்தா!!!

சென்னை: நடுத்தர வர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் எது செய்தாலும், அது சபையேறிவிடும்.. இதுவே காசு இருப்பவர்கள் செய்தால், அது பேசப்படாது. முதல்மனைவி இருக்கும்போது, 2வது திருமணம் எப்படி செய்யலாம்? இந்திய திருமண சட்டம் இதை எப்படி அனுமதிக்கிறது? பிரபலமானவராக இருந்தாலும் அது செல்லுமா? என்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் குறித்து பத்திரிகையாளர் செய்யாறு பாலு பல கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
Cheyyaru Balu என்ற தன்னுடைய யூடியூப் சேனலில், காஸ்ட்லி சமையல்காரரின் சீப்பான செயல்" என்ற தலைப்பில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, 'மாதம்பட்டி ரங்கராஜ் வெறும் சமையல்காரராக இருந்தால், இந்த 2வது திருமணம்கூட பத்தோடு பதினொன்றாக போய்விடும்.. ஆனால், அதையும் தாண்டி மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு பெரிய செலிபிரிட்டி, தயாரிப்பாளர், நடிகராக வலம் வருபவர்..
இது அனைத்தையும் தாண்டி காஸ்ட்லியான சமையல்காரர்.. தனி ஃபிளைட்டில், அல்லது ஹெலிகாப்டரில் சென்று சமையல் செய்வது என்று காஸ்ட்லியாக உள்ளார்.. அது அவரது விருப்பம்...
ரூ.1200 கோடி சொத்து
ஆனால் ஆரம்பத்தில் மாதம்பட்டி ரங்கராஜன் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், தான் ஒரு சமையல்காரர் என்பதால், பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை என்றார். அப்படியிருந்தும், இவருக்கு பெண் தந்திருக்கிறார்கள்.. (முதல் மனைவி ஸ்ருதி).
வளர்ந்தபிறகுதான், ஹெலிகாப்டரில் சென்று சமைக்க துவங்கியிருக்கிறார்.. அதிலும் விஐபி, விஐபி வீடுகளில் மட்டுமே சென்று சமைக்கிறார்.. இவர் 25 வகையான சட்னி செய்கிறாராம்.. 201 வகை ஸ்வீட் தயாரிப்பாராம்.. அதிலும் சர்க்கரையே இல்லாமல் எப்படி ஸ்வீட் தயாரிக்க முடியும்? இதெல்லாம்தாண்டி இவருக்கு ரூ.1200 கோடி சொத்து இருப்பதாக சொல்கிறார்கள்..
குழந்தைகள்தான் உலகம்
எந்தவொரு மனிதருக்கும், ஒருகட்டத்தில் காசு கையில் சேர சேர சேர, இயல்பே மாறிவிடும்.. இந்த நேரத்தில்தான், மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி இன்ஸ்டாவில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.. அதில், தன்னுடைய குழந்தைகளுடன் இருக்கும்படியான போட்டோவை பதிவிட்டு, இதுதான் என்னுடைய உலகம், இதை நம்பிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது போல பதிவிட்டிருந்தார்.
ஜாய் என்ற பிரபல காஸ்ட்யூமர் டிசைனர்தான், மாதம்பட்டி ரங்கராஜூக்கும் பர்சனல் காஸ்ட்யூம் டிசைனர் ஆவார்.. அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், ஜாய்க்கு ஏற்கனவே ஒரு டைரக்டருடன் திருமணம் நடந்து விவாகரத்து நடந்துள்ளது...
ஜாய் நெற்றியில் குங்குமம்
இப்போது ஜாய் நெற்றியில் மாதம்பட்டி ரங்கராஜ் குங்குமம் வைப்பது போன்ற போட்டோவை ஜாய் பதிவிட்டுள்ளார்.. இதுவே நடுத்தர வர்க்கமோ, அல்லது அதற்கு கீழுள்ள வர்க்கமோ இதை செய்திருந்தால், மீடியாவில் பரபரப்பாக பேசி அவர்களது மானத்தையே வாங்கியிருப்பார்கள்..
நடுத்தர வர்க்கத்துக்கு கீழுள்ளவர்கள் எது செய்தாலும் அது சபையேறிவிடும்.. இதுவே காசு இருப்பவர்கள் செய்தால், அது பேசப்படாது. முதல்மனைவி இருக்கும்போது, 2வது திருமணம் எப்படி செய்யலாம்? இந்திய திருமண சட்டம் இதை எப்படி அனுமதிக்கிறது?பிரபலமானவராக இருந்தாலும் அது செல்லுமா? என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள்..
முக்கிய புள்ளிகள், செலிபிரிட்டிகள்
இன்று குக் வித் கோமாளியில் ஜட்ஜ் ஆக செல்லும் அளவுக்கு கொண்டு வந்தது மக்கள்தான்.. அதே மக்கள் இன்று இந்த கேள்வியை எழுப்புகிறார்கள்.. ஒருவனுக்கு ஒருத்தி என்பதைத்தாண்டி, விவாகரத்துகள் சர்வசாதாரணமாக நடக்கின்றன...
சமுதாயத்தின் முக்கிய புள்ளிகள், செலிபிரிட்டிகள்தான், பலருக்கும் ரோல் மாடல்களாக உள்ளனர்.. தங்களது ரோல் மாடல்களே இப்படி செய்யும்போது, நாம் ஏன் செய்யக்கூடாது? என்ற எண்ணம் மாதம்பட்டி ரங்கராஜ் விஷயத்திலும் எழுந்துள்ளது..
நீங்க என்னதான் செலிபிரிட்டியாக இருந்தாலும்சரி, 1200 கோடிக்கு சொத்து இருந்தாலும்சரி, தனி விமானத்தில் பறந்து சமையல் செய்தாலும்சரி, முதல் மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கும்போது, அந்த பிள்ளைகள் கண்ணெதிரிலேயே, இதுதான் இரண்டாவது மனைவி என்று சொல்வதை, இந்திய மக்களும், இந்திய சட்டமும் ஏற்றுக் கொள்ளாது என்பதுதான் தார்மீகமான உண்மை" என்று தெரிவித்துள்ளார்...