இனி மாதம் மாதம் சிலிண்டர் மாற்ற வேண்டாம்.. பைப்பை திறந்தால் LPG கேஸ் வரும்.. சென்னையில் செம திட்டம்...

இனி மாதம் மாதம் சிலிண்டர் மாற்ற வேண்டாம்.. பைப்பை திறந்தால் LPG கேஸ் வரும்.. சென்னையில் செம திட்டம்...
இந்த திட்டங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இரவு நேரங்களில் வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகள்,..

சென்னை: சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான பழைய மகாபலிபுரம் சாலை (OMR) மற்றும் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள சுமார் 20,000 வீடுகளுக்கு அடுத்த 18 மாதங்களுக்குள் குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) விநியோகம் தொடங்க உள்ளது..

குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) திட்டத்தின் சவால்கள்

இந்த திட்டங்கள் சில சிக்கல்களை எதிர்கொள்கின்றன. இரவு நேரங்களில் வேலை செய்வதற்கான கட்டுப்பாடுகள், அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்படுதல் மற்றும் குறுகிய கால அனுமதிப் பத்திரங்கள் பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை இந்த பணிகள் தாமதம் ஆக காரணம் ஆகும். எனவே, இந்த பணிகளை விரைந்து முடிக்க, ஒற்றைச் சாளர அனுமதி வழங்க வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன. தற்போது, குழாய் வழி இயற்கை எரிவாயுவின் விலை, சமையல் எரிவாயுவை (LPG) விட 4-5% வரை குறைவாக உள்ளது...

குழாய் வழி இயற்கை எரிவாயுவின் பயன்பாட்டினால், சமையல் எரிவாயுவுடன் ஒப்பிடும்போது மாதந்தோறும் சுமார் ₹530 வரை மட்டுமே செலவு ஆகும். கிட்டத்தட்ட மாதம் 250 ரூபாய் வரை நாம் சேமிக்க முடியும்..

குழாய் வழி இயற்கை எரிவாயு (PNG) இணைப்பு பெறுவதற்கான வழிமுறைகள்

குழாய் வழி இயற்கை எரிவாயு உங்கள் பகுதியில் கிடைக்குமா என்பதை அறிய, 18002021999 என்ற இலவச எண்ணிற்கு அழைக்கலாம். விநியோகம் உறுதி செய்யப்பட்ட பின்னர், விண்ணப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அளித்த பிறகு, எரிவாயு மீட்டரை பொருத்துதல் மற்றும் அடுப்பில் சில மாற்றங்களைச் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த வேலைகளை முடிக்க ஒரு நாள் போதுமானது. இதற்காக ₹7,000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டணத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. குழாய் வழி இயற்கை எரிவாயு விரைவில் சென்னை மக்களுக்குக் கிடைக்கவுள்ளது. இதன் மூலம் எரிவாயு நுகர்வோர் குறிப்பிடத்தக்க சேமிப்பை அடைய முடியும். மாதம் மாதம் சென்று சிலிண்டர் வாங்க வேண்டிய வேலை இதனால் இனி இருக்காது..

சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்திற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக 8 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) 27 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதி கோரியிருந்த நிலையில், தற்போது 8 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

குழாய் மூலம் கேஸ் - விரைவில் சென்னையில்

தமிழகத்தில் குழாய் மூலம் வீடுகளுக்கே எரிவாயு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சென்னையில் முதற்கட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் சில வாரங்களில் இதுகுறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் சமையல் அறைகளில் குழாய் மூலம் எரிவாயு இணைப்பு பெறும் வசதி வெகுவிரைவில் சென்னையில் சாத்தியமாக உள்ளது..

பதிவு செய்த குடியிருப்புகள்

சென்னையில் உள்ள குடியிருப்புகளில் இதற்கான முன்பதிவு (Registration) தொடங்கியுள்ளது. இதுவரை 30,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தலா ₹ 576 செலுத்தி PNG எனப்படும் குழாய் எரிவாயு இணைப்புக்கு பதிவு செய்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன..

சென்னையில் வீடுகளுக்கு PNG எனப்படும் பைப்லைன் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவதற்கு தமிழக அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. எண்ணூரில் உள்ள சிஎன்ஜி (CNG) எனப்படும் சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையத்தில் இருந்து பைப்லைன்கள் அமைப்பதற்கான அனுமதிகளை ஏற்கனவே சாலைப் போக்குவரத்துத் துறையிடம் இருந்து பெற்றுள்ளனர்...

சென்னையில் பிஎன்ஜி (PNG) சேவையின் முதல் வாடிக்கையாளர்களாக திருமங்கலம் அருகே உள்ள ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட தொழில் துறை உதவிகளை வழங்கி வருகிறது. மேலும், ஒரு நோடல் ஏஜென்சியும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..