கட்டுமான தொழிலாளர் வாரிசுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை - உடனே விண்ணப்பிக்கவும்

Tamil Nadu Government Scheme : தமிழ்நாடு அரசு கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்திர உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் பெற்றோரின் கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை சமர்பிக்க வேண்டும்..
இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது ; திருவள்ளூர், மாவட்டம் திருவள்ளூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் Technician Medical Electronics, Computer Hardware & Network Maintenance, Advanced CNC Machining Technician, Lift and Escalator Mechanic, Plumber, & Sheet Metal Worker ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான நேரடிசேர்க்கை நடைபெறுகிறது. இத்தொழிற்பயிற்சி நிலையமானது முற்றிலும் கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே என்பதால், எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கட்டுமான தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும்போது கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் அட்டை தவறாது கொண்டுவர வேண்டும். சேர்க்கையில் சேரவிரும்புவோர் 8-ம் வகுப்பு, / 10-வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், பாஸ்போர்ட்அளவு புகைப்படங்கள் நான்கு. ஆதார்அட்டை, வருமான சான்றிதழ் . வங்கி கணக்குபுத்தகம், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம் (Collector Office Campus) அருகில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையத்தை அணுகவும்.
பயிற்சியில் சேரும் பயிற்சியாளர்களுக்கு, இலவச மிதிவண்டி, சீருடை, பாடநூல்கள், வரைபட கருவிகள், காலணிகள், பஸ்பாஸ், அடையாள அட்டை வழங்கப்படும். மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-ம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவ - மாணவிகளுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின்படி மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்ணைகளை 8778452515, 8248333532, 8838522794 தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்