வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு பெற கட்டணம் உயர்வு- 4 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரிப்பு

மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளன.
கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதிக்கு முன்பு மீட்டர் வைப்புத்தொகை ரூ.2 ஆயிரமாக இருந்தது
.சென்னை:
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை பிரிவில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த 2 பிரிவுகளிலும் புதிய மின் இணைப்பு வழங்க மீட்டர் வைப்புத்தொகை, மின் பயன்பாடு வைப்பு தொகை, வளர்ச்சி கட்டணம், மின் இணைப்பு கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பலவகை கட்டணத்தை மின் வாரியம் வசூலிக்கிறது. இந்த கட்டணம் ஒருமுறை செலுத்தக்கூடியதாகும்.
இந்த நிலையில் மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் பல்வேறு வகை கட்டணங்களையும் 3.16 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளத...
இந்த நிலையில் மின் பயன்பாட்டு கட்டணம் மற்றும் பல்வேறு வகை கட்டணங்களையும் 3.16 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி, ஒரு முனை பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,070-ல் இருந்து, ரூ.1,105 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும் உயர்ந்துள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,095 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.215-ல் இருந்து ரூ.220 ஆகவும், வைப்புத்தொகை ரூ.320-ல் இருந்து ரூ.330 ஆகவும் அதிகரித்துள்ளது